Published:Updated:

`மெஸ்ஸி கேங்' - 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிக்பாக்கெட் கும்பல் போலீஸில் சிக்கியது எப்படி?

மெஸ்ஸி கேங் கைது

ஃபுட் பால் விளையாட்டால் ஈர்க்கப்பட்ட பிங்கு மெஸ்ஸி, அதற்காகவே பிக்பாக்கெட் செய்யத் தொடங்கியிருக்கிறான். அதைத் தொடர்ந்து, கொலை உட்பட ஆயுதச் சட்டத்தின் கீழ் 10 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டான்.

`மெஸ்ஸி கேங்' - 5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிக்பாக்கெட் கும்பல் போலீஸில் சிக்கியது எப்படி?

ஃபுட் பால் விளையாட்டால் ஈர்க்கப்பட்ட பிங்கு மெஸ்ஸி, அதற்காகவே பிக்பாக்கெட் செய்யத் தொடங்கியிருக்கிறான். அதைத் தொடர்ந்து, கொலை உட்பட ஆயுதச் சட்டத்தின் கீழ் 10 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டான்.

Published:Updated:
மெஸ்ஸி கேங் கைது

கடந்த டிசம்பர் 20-ம் தேதி டெல்லி சி.ஆர் பார்க் காவல் நிலையத்தின் அதிகாரி உட்பட ஒரு போலீஸ் குழு அந்தப் பகுதியில் ரோந்து சென்றிருக்கிறது. அப்போது சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ரிக்‌ஷா ஒன்று அங்கு இருந்திருக்கிறது. அதைக் கவனித்த போலீஸ் குழு அந்த ஆட்டோவை சோதனையிட்டபோது உள்ளே 4 பேர் அமர்ந்திருந்திருக்கிறார்கள். அவர்களை விசாரித்தபோது, அதே பகுதியில் வசிப்பவர்கள் என்றும், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

போலீஸ்
போலீஸ்

பின்னர் போலீஸார் சோதனையிட்டபோது அவர்களிடம் 11 மொபைல் போன்கள் அவர்களிடம் இருந்தன. அதைத் தொடர்ந்து, போலீஸுக்கு சந்தேகம் வலுத்திருக்கிறது. மேலும் அவர்களை விசாரித்தபோதுதான் 55 வழக்குகளில் தேடப்பட்ட `மெஸ்ஸி கேங்' குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பல வருடங்களாக காவல்துறையிடமிருந்து தப்பித்து தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மெஸ்ஸி கேங்கிடம் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டதில், அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியால் ஈர்க்கப்பட்டு கால்பந்து விளையாடப் பழகிய ஜசோலாவில் வசிக்கும் பிங்கு மெஸ்ஸி (43) என்பவனின் தலைமையில், 4-5 ஆண்டுகளாக 3 குழுக்கள் இயங்குவது தெரியவந்தது.

அந்தக் குழுவின் தலைவனான பிங்கு மெஸ்ஸியும் கைதுசெய்யப்பட்ட நால்வரில் இருந்தது காவல்துறையின் வேலையை இலகுவாக்கியது. அதைத் தொடர்ந்து விசாரணையில், ஃபுட் பால் விளையாட்டால் ஈர்க்கப்பட்ட பிங்கு மெஸ்ஸி, அதற்காக பிக்பாக்கெட் செய்யத் தொடங்கியிருக்கிறான். அதைத் தொடர்ந்து, கொலை உட்பட ஆயுதச் சட்டத்தின் கீழ் 10 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டான். இவர்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு பிக்பாக்கெட் அடிப்பதுதான். கூட்ட நெரிசலான பகுதிகளில் விலையுயர்ந்த செல்போன் வைத்திருப்பவர்கள், அதிகம் தங்க நகைகள் அணிந்திருப்பவர்கள்தான் இவர்களின் கழுகு கண்களுக்கு குறி.

கைது
கைது

ஒரு குழுவாக இணைந்து, பொருள் வைத்திருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் மொபைல்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருள்களை திருடிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷாவில் அங்கிருந்து தப்பியோடி அதை பங்குபிரித்துக் கொள்வதும் தெரியவந்திருக்கிறது. இவர்களிடமிருந்து, திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 56 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா கைப்பற்றப்பட்டிருக்கிறது. இவர்களிடம் நடத்தும் விசாரணை மூலம் மற்ற இரண்டு குழுவையும் தேடிவருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.