Published:Updated:

`நிர்வாண வீடியோ காலில் வா...’ - பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து மிரட்டியவர் கைது

இன்ஸ்டாகிராம்
News
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமை ஹேக் செய்து நிர்வாண வீடியோ கால் செய்யக் கூறி மிரட்டிய இளைஞரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:

`நிர்வாண வீடியோ காலில் வா...’ - பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து மிரட்டியவர் கைது

இன்ஸ்டாகிராமை ஹேக் செய்து நிர்வாண வீடியோ கால் செய்யக் கூறி மிரட்டிய இளைஞரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம்
News
இன்ஸ்டாகிராம்

2021-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவர், ஆந்திரப் பிரதேசத்தின் ரச்சகொண்டா சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், "யாரென்றே தெரியாத ஒருவர் மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டுகிறார். தவறாகச் சித்திரிக்கப்பட்ட படத்தைப் பகிராமல் இருக்க நிர்வாணமாக வீடியோ கால் செய்யக் கூறி மிரட்டுகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

ஹேக்கர்
ஹேக்கர்

அதைத் தொடர்ந்து, காவல்துறை தேவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டு குற்றவாளிக்கு வலைவிரித்திருக்கிறது. இதை அறிந்துகொண்ட குற்றவாளி, அவனின் செல்போன், சிம் கார்டு போன்றவைகளை உடைத்து ஆதாரம் இல்லாமல் தப்பிவிட்டான். ஆனாலும், இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறப்புக் குழு தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்துவந்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை குற்றவாளியைக் கைதுசெய்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஏசிபி எஸ்.வி.ஹரி கிருஷ்ணா, "ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தைச் சேர்ந்தவன் ஜி.மனோஜ். 27 வயதான இவர் செங்கல் சூளையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பொறியியல் பட்டதாரி.

ஆபாசத்துக்கு அடிமையான இவர், இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கைத் தொடங்கி, அதில் குறிப்பிட்ட சில பெண்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பெண்களுக்கு நட்பு கோரிக்கை கொடுப்பதும், அவர்களிடம் பெண்ணைப் போலவே பேசி நட்பாகப் பழகியும் வந்திருக்கிறார். இதற்கிடையில், அவர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து இவர் உருவாக்கி வைத்திருக்கும் இணைப்பை அனுப்பி, அதன் மூலம் அந்தப் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்வார். அதில் அவர்களின் சாட் ஹிஸ்டரி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து, அதற்குப் பிறகே அவரின் உண்மை முகத்தை அந்தப் பெண்களுக்குக் காட்டுவார்.

காவல்துறை
காவல்துறை

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை உன் இஸ்டாகிராமிலேயே பதிவிட்டு எல்லோருக்கும் அனுப்புவேன் என மிரட்டி, அவர்களை நிர்வாணமாக வீடியோ கால் செய்ய கட்டாயப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் அதே முறையில் மற்றொரு ஹைதராபாத் சிறுமியின் கணக்கை அணுகி, அவரின் புகைப்படங்களுடன் மோசமான கருத்துகளை அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். சிறுமி அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, ​​அவர் நிர்வாண வீடியோ அழைப்புகள் செய்ய அவரை மிரட்டியிருக்கிறார். அந்தத் தகவலை வைத்தே குற்றம்சாட்டப்பட்டவரை கைதுசெய்திருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர் திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்" எனத் தெரிவித்திருக்கிறார்.