Published:Updated:

போலீஸ் துணையுடன் இன்ஷூரன்ஸ் மோசடி... சினிமா பாணியில் சிக்கிய கும்பல்! #TamilnaduCrimeDiary

சினிமா பாணியில் நடைபெற்ற இன்ஷூரன்ஸ் மோசடி முதல் தாமதமாகும் ஐ.பி.எஸ். டிரான்ஸ்பர் வரை... #TamilnaduCrimeDiary

சினிமா பாணியில் மோசடியாக ஆவணங்களைத் தயாரித்து மோட்டார் வாகன விபத்துகளில் இன்ஷூரன்ஸ் மோசடியில் ஈடுபட்ட கும்பலுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது திருச்சி நீதிமன்றம்.

சமீபகாலமாகப் போலி எப்.ஐ.ஆர்கள் மூலம், மோட்டார் வாகன விபத்துகளுக்கான இன்ஷூரன்ஸ் பெறுவது அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான 54 வழக்குகளின் கோப்புகள் காணாமல்போனது. அப்போது அந்த விஷயம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மோட்டார் வாகனம்
மோட்டார் வாகனம்

மேலும், தனியார்க் காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ஒரு விபத்துக்குப் பல இடங்களில் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதாகக் கூறியதால், இதுபோன்ற குளறுபடிகளைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைகள் ஒருபுறம் இருக்க, மோட்டார் வாகன விபத்துக் காப்பீட்டுத் தொகை பெறுவதில் தமிழகத்திலேயே திருச்சி முதன்மையான இடத்தில் இருப்பதாகவும், இதுதொடர்பாக, யுனைடெட் மற்றும் நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் சார்பில் சி.பி.ஐக்குப் புகார் கொடுத்தனர். புகாரின் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

`2 நாட்களாக மாயம்; கிணற்றில் சடலமாக மீட்பு' -ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்?

அந்த விசாரணையில், திருச்சி திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் சரவணன், வழக்கறிஞர் சுப்பிரமணியன், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியர் பக்கிரிசாமி மற்றும் வேளாங்கண்ணி என்பவரின் மனைவி ஜெயமேரி உள்ளிட்டோர் இணைந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து விபத்துக் காப்பீடு இன்ஷூரன்ஸ் பெற்றது தெரியவந்தது.

கைது
கைது

இந்தக் கும்பல் போலியாக ஆவணங்கள் தயாரித்து பல்வேறு பெயர்களில் பல லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது. இதுதொடர்பான சி.பி.ஐயின் வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உடல்நலம் குன்றி இறந்து போனார். மற்ற மூவர் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் சுப்பிரமணியன் மற்றும் பக்கிரிசாமி இருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா நான்காயிரம் அபராதமும் வேளாங்கண்ணி மனைவி ஜெயமேரிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு, திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்று, பலர் மோட்டார் வாகன விபத்துகளில் மோசடியாக ஆவணங்களைத் தயாரித்து, இன்ஷூரன்ஸ் தொகையைப் பெற்றுள்ளது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெறுவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலர்ட்!
ஆதிவாசிகள் உதவியுடன் மாவோயிஸ்ட் வேட்டை!

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பாடம் புகட்டுவோம் என மாவோயிஸ்டுகள் மிரட்டல் கடிதம் அனுப்பினர். மேலும், அடிக்கடி அரசை மிரட்டும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் மிரட்டல் அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது.

மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட்

மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களை மாவோஸ்டுகளின் கேந்திரங்கள் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களின் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கேரள தலைமைச் செயலர் டோம் ஜோஸ், டி.ஜி.பி. லோக்நாத் பெகரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் ஆதிவாசிகளின் உதவியுடன் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஏன் தாமதமாகிறது ஐ.பி.எஸ் டிரான்ஸ்பர்?
சுவாரஸ்யப் பின்னணி

கடந்த சில நாள்களாக தமிழகத்தின் உயர் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் லிஸ்ட் ஃபைல் ஒன்று அங்குமிங்கும் அலைகிறது. சென்னை மாநகரத்தின் முக்கியப் பதவியை மையமாக வைத்து பந்து விளையாடப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு முக்கிய அதிகாரி, தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்காக இந்த டிரான்ஸ்பர் தொடர்பான ஃபைலை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறாராம்.

ஏ.கே.விஸ்வநாதன்
ஏ.கே.விஸ்வநாதன்
`165 கோடி ரூபாய் ஓகே என்றால் டீல்!’- சென்னை ஸ்டார் ஹோட்டலுக்கு அதிர்ச்சி கொடுத்த கில்லாடிகள்

இதெல்லாம் தெரிந்த முதல்வர், ஏனோ மௌனமாக இருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனரான ஏ.கே.விஸ்வநாதன் இந்தப் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. அவரும், `போதும் இந்தப் பதவி' என்கிற மூடுக்கு வந்துவிட்டார். அவருக்கு அடுத்ததாக சென்னை கமிஷனர் பதவிக்கு சந்திப்ராய் ரத்தோர் (கூடுதல் டி.ஜி.பி) பெயர் அடிபட்டது. இப்படியிருக்க, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அண்மையில் முதல்வரை நேரில் சந்தித்து, தனது வீட்டு திருமண விசேஷத்தைச் சுட்டிக்காட்டி, ஆறு மாதம் தன்னை மாற்றவேண்டாம் என்று கோரிக்கை வைத்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏ.கே.விஸ்வநாதனின் வேண்டுகோள் குறித்து ரத்தோரிடமும் பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர், "முடிந்தால் இப்போதே என்னை சென்னை கமிஷனராக நியமியுங்கள். ஆறுமாதம் கழித்து வேண்டாம். தேர்தலுக்கு மிக நெருக்கமான நேரத்தில் வருவதை நான் விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு