Published:Updated:

துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு: பகையைத் தீர்க்கும் இடமாக மாறிய டெல்லி ரோஹினி நீதிமன்றம்?! |பகுதி 1

டெல்லி ரோஹினி கோர்ட்
News
டெல்லி ரோஹினி கோர்ட்

டெல்லி ரோஹினி நீதிமன்றம் குற்றவாளிகளின் தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ளும் இடமாக மாறியிருக்கிறது.

டெல்லியிலுள்ள ரோஹினி நீதிமன்றம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். மிகவும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் ரோஹினி நீதிமன்றத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கிரிமினல்கள், தங்களது எதிரிகளைத் தீர்த்துக்கட்ட ரோஹினி நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மும்பையில்தான் 1990-களில் மாஃபியாக்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும்போது நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் தங்களது எதிரிகளைச் சுட்டுக்கொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் எதிரிகளைப் பழிவாங்கும் அந்தக் கலாசாரம் இப்போது டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ரோஹினி நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி யாரும் எதிர்பாராதவிதமாக சக்தி குறைந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது.

டெல்லி ரோஹினி கோர்ட்
டெல்லி ரோஹினி கோர்ட்

இதில் பாதுகாப்புக்கு வந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். வெடித்த குண்டைச் சோதித்தபோது வெடிகுண்டு தயாரிக்கத் தெரியாத ஒருவர் தயாரித்திருப்பது தெரியவந்தது. வெடிகுண்டை மிகவும் சரியான முறையில் தயாரித்திருந்தால் குண்டு வெடிப்பில் சேதம் அதிகமாக இருந்திருக்கும். ஆன்லைனில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தீவிரவாதிகளின் செயலாக இருக்கும் என்று டெல்லி போலீஸார் கருதினர். ஆனால் இந்தச் சம்பவத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதோடு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டவிதமும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இதை தனி ஒரு நபர்தான் செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அளித்த பேட்டியில், `ரோஹினி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த அன்று நீதிமன்றத்துக்குள் வந்த வாகனங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். நீதிமன்றம், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள், குடியிருப்புக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். எங்களது விசாரணையில் 1,000 மணி நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்தோம். வெடிகுண்டை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப் பயன்படுத்திய பேக் பறிமுதல் செய்யப்பட்டது.

சிசிடிவி
சிசிடிவி
Representational Image

அதிலிருந்த தயாரிப்பாளரின் லோகோவை வைத்து அந்த பேக் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தோம். பேக் தயாரிக்கும் கம்பெனி மும்பையில் இருந்தது. அந்த கம்பெனி, பேக்கை 2006-ம் ஆண்டு தயாரித்திருந்தது. அந்த கம்பெனி டெல்லிக்கு பேக் சப்ளை செய்யும் கம்பெனிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் அந்த பேக் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் பூஷண் கதாரியா என்பவரை விசாரணைக்கு வரவழைத்து விசாரித்தபோது அவர்தான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்துவதற்கு அவர் சொன்ன காரணம் போலீஸாருக்கு மிகவும் வேடிக்கையாகவும், அதேசமயம் இப்படியும் ஒருவர் இருப்பாரா என்றும் நினைக்கத் தோன்றியது.

பூஷண் கதாரியா
பூஷண் கதாரியா

போலீஸாரின் விசாரணைக்கு கதாரியா சரியாக ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீஸாரைக் குழப்பும்விதமாகவே பதிலளித்தார். போலீஸ் காவலில் இருந்தபோது கழிவறைக்குச் சென்ற நேரத்தில் அங்கிருந்த கைகழுவப் பயன்படும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீஸார் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அவர் இப்போது சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் விரைவில் மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் என்ன காரணத்துக்காக கோர்ட்டில் வெடிகுண்டை வைத்தார் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்..!

(தொடரும்...)