Published:Updated:

தஞ்சாவூர்: வீடுகட்ட கடன்... நிதி நிறுவன நெருக்கடியால் கணவன், மனைவி தற்கொலையா?! - போலீஸ் விசாரணை

தற்கொலை செய்து கொண்ட அருள்சாமி
News
தற்கொலை செய்து கொண்ட அருள்சாமி

மகன் ஆரோக்கிய செபஸ்டீன் சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பேராவூரணி அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு இரண்டு மாதங்களாக தவணை செலுத்தாததால், நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மரியாதைக் குறைவாகப் பேசியதால் மணமுடைந்த கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாகக் கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சவரியம்மாள்
தற்கொலை செய்துகொண்ட சவரியம்மாள்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மேலப்பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி (60). இவரின் மனைவி சவரியம்மாள் (50), இவர்களுக்கு சவரி சுரேஷ் (35) ஆரோக்கிய செபஸ்டீன் (32) என இரண்டு மகன்கள் உள்ளனர். சவரி சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில் பெற்றோருடன் இளைய மகன் மட்டும் வசித்துவந்துள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பு வரை அருள்சாமி பொள்ளாச்சியில் சமோசா வியாபாரம் செய்துவந்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பியவர் அங்கேயே தங்கினார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கிராமத்தில் வீடு கட்டுவதற்காக, தன் மனைவி சவரியம்மாள் பெயரில் கடன் வாங்கியிருந்தார். மாதத் தவணையைச் சரியாக செலுத்தியும் வந்திருக்கிறார். கொரோனா லாக்டெளன் நேரத்திலும் தவணைகட்ட தவறவில்லை.

தற்கொலை - Representational Image
தற்கொலை - Representational Image

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகப் பெய்துவரும் தொடர்மழை உள்ளிட்ட சில காரணங்களால் பணம் கட்ட முடியாமல் தவித்துள்ளார். கடன் தொகைக்கான தவணை கட்டாததால் நிதி நிறுவனத்திலிருந்து போனில் பேசியவர்கள் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி பணத்தைக் கட்டச்சொல்லி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருள்சாமி, தன் மனைவி சவரியம்மாளிடம், ``கொடுக்கல் வாங்கலில் நாணயமாக இருந்துவந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்ப இருக்குற பொருளாதாரச் சிக்கலில் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை” எனக் கலங்கியபடி கூறியிருக்கிறார். ``எல்லாம் சரியாகிடும்’’ என சவரியம்மாள் கணவரைத் தேற்றியிருக்கிறார். ஆனால் அவர் சோர்வாகவே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் ஆரோக்கிய செபஸ்டீன் வியாபாரத்துக்கு வெளியில் சென்றுவிட்டார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்துவிட்டனர். நீண்ட நேரம் வீட்டுக்குள்ளிருந்து யாரும் வராததால் அக்கம் பக்கதில் உள்ளவர்கள் யதேச்சையாகப் பார்க்க கணவன், மனைவி இருவரும் வாயில் நுரை வழிந்த நிலையில் சரிந்து கிடந்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசும ருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கெனவே அவர்கள் இறந்து விட்டார்கள் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பெற்றோர் இறப்புக்குக் காரணமான நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கிய செபஸ்டீன் சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து அவர்களது உறவினர்கள் தரப்பில் பேசினோம். ``கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்பவே அன்பாக இருப்பார்கள். கொரோனாவுக்கு முன்பு வரை வியாபாரம் நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகும் வியாபாரம் செய்துவந்தனர். வீடுகட்ட நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத முறையில் பேசியதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக” கண்கலங்கத் தெரிவித்தனர்.