Published:Updated:

திருப்பூர்: பொதுக்கிணற்றில் விஷம் கலப்பு?! - தம்பதிமீது வழக்கு பதிவு!

வெள்ளக்கோவில் திருமங்கலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றுக்கு அருகில் வசிக்கும் சண்முகம், பத்மாவதி தம்பதி, அந்தக் கிணற்றில் விஷத்தைக் கலந்ததாகப் புகார் எழுந்தது.

திருப்பூர்: பொதுக்கிணற்றில் விஷம் கலப்பு?! - தம்பதிமீது வழக்கு பதிவு!

வெள்ளக்கோவில் திருமங்கலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றுக்கு அருகில் வசிக்கும் சண்முகம், பத்மாவதி தம்பதி, அந்தக் கிணற்றில் விஷத்தைக் கலந்ததாகப் புகார் எழுந்தது.

Published:Updated:

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்டது திருமங்கலம். இந்தப் பகுதியிலுள்ள பொதுக்கிணறு பல ஆண்டுக்காலமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்தக் கிணற்றில் இருந்து மின் மோட்டாா் மூலம் எடுக்கப்படும் நீரை, அப்பகுதியைச் சேர்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் குடிக்கவும், சமைக்கவும், வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கம்போல் கிணற்று மோட்டாரை புதன்கிழமை காலை இயக்கவந்தபோது, கிணற்றுக்கு அருகில் வசிக்கும் சண்முகம் (59), அவரின் மனைவி பத்மாவதி (55) இருவரும் ஒரு பாட்டிலை கிணற்றுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.

investigation
investigation

அதை எடுத்துப் பார்த்தபோது, விஷம் என்பது தெரியவந்தது. மேலும், கிணற்றில் அழுகிய காய்கறிகள், பழைய துணிகள் உள்ளிட்டவையும் கிடந்திருக்கின்றன. இது தொடர்பாக மகேந்திரன் அளித்த புகாரின் பேரில் சண்முகம், பத்மாவதி ஆகியோர் மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும், கிணற்று நீரின் மாதிரி எடுத்து திருப்பூரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.