Published:Updated:

திண்டுக்கல்: சொத்துப் பிரச்னை; வாக்கிங் சென்றவர் கடத்தப்பட்டாரா, கடத்தல் நாடகமா?

அன்புச்செல்வம்

கான்ட்ராக்ட் தொழில் செய்துவரும் வெள்ளைச்சாமி ஒரு லட்சத்துக்காக ஆளைக் கடத்தியிருப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்புச்செல்வம், அருள்நாயகம், வெள்ளைச்சாமியைப் பழிவாங்குவதற்காகக்கூட கடத்தல் நாடகம் ஆடியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

திண்டுக்கல்: சொத்துப் பிரச்னை; வாக்கிங் சென்றவர் கடத்தப்பட்டாரா, கடத்தல் நாடகமா?

கான்ட்ராக்ட் தொழில் செய்துவரும் வெள்ளைச்சாமி ஒரு லட்சத்துக்காக ஆளைக் கடத்தியிருப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்புச்செல்வம், அருள்நாயகம், வெள்ளைச்சாமியைப் பழிவாங்குவதற்காகக்கூட கடத்தல் நாடகம் ஆடியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

Published:Updated:
அன்புச்செல்வம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செல்வம். பெரியகுளம் சாலையில் ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையை சேர்ந்த அருள்நாயகத்துக்கும், அன்புச்செல்வத்துக்கும் ஹோட்டல் சொத்து தொடர்பாகப் பிரச்னை இருந்திருக்கிறது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார்

இந்நிலையில் வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அன்புச்செல்வத்தைக் காணவில்லை, யாரேனும் கடத்தியிருக்கலாம் என அவரின் மகன் ஜெயகிஷோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார் அங்கு சோதனையிட்டபோது புறவழிச்சாலையில் அன்புச்செல்வத்தின் ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. அருகே இருந்த சிசிடிவி கேமராக்களிலும் எவ்விதத் துப்பும் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷேக் அப்துல்லா, தயாநிதி ஆகியோர் கொண்ட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அன்புச்செல்வத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆயுதங்கள்
ஆயுதங்கள்

செல்போன் சிக்னல் மற்றும் பல்வேறு விசாரணைகள் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பறையன்குளம் கண்மாய் அருகே இருந்த அன்புச்செல்வத்தை போலீஸார் மீட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக வத்தலகுண்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் வெள்ளைச்சாமி (46), தெற்குத்தெரு சிவா (30) விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் (35) விஜய் (23) பேரையூரைச் சேர்ந்த வடிவேல் (32), திருப்புவனத்தைச் சேர்ந்த மணி (41) உள்ளிட்ட ஏழு பேர் போலீஸார் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தப்பட்டவரை ஏழு மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.

எஸ்.பி சீனிவாசன்
எஸ்.பி சீனிவாசன்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``பெரியகுளம் ரோட்டில் உள்ள ஹோட்டல் சொத்துக்கு அன்புச்செல்வமும், அவருடைய உறவினர் சென்னையில் வசிக்கும் அருள்நாயகமும் உரிமை கோருவது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இவ்விவகாரத்துக்காக இருவரும் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இறுதியில் அருள்நாயகத்துக்கு ஹோட்டல் சொந்தம் என முடிவானதாகத் தெரிகிறது. இதையடுத்து அருள்நாயகம் வத்தலகுண்டைச் சேர்ந்த கான்ட்ராக்டர் வெள்ளைச்சாமி என்பவரிடம் ஹோட்டலை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளார். வெள்ளைச்சாமியும் தனது தரப்பிலிருந்து ஹோட்டலுக்கு காவலாளியை நியமித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அன்புச்செல்வம் காவலாளியிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில்தான் வாக்கிங் சென்ற அவர் கடத்தப்பட்டதாகப் புகார் வந்தது. புகார் மனு வரும்போதே, அனைத்து விவரங்களுடன் அவரின் மகன் வந்தார். அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அன்புச்செல்வத்தை மீட்டு வந்தோம். அங்கு மணி என்பவர் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் வெள்ளைச்சாமி அன்புச்செல்வத்திடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு கடத்தியதாகத் தெரியவருகிறது. ஆனால் பெரிய அளவில் கான்ட்ராக்ட் தொழில் செய்துவரும் வெள்ளைச்சாமி, ஒரு லட்சத்துக்காக ஆளைக் கடத்தியிருப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அன்புச்செல்வம் அருள்நாயகம், வெள்ளைச்சாமியைப் பழிவாங்குவதற்காகக்கூட கடத்தல் நாடகம் ஆடியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்றனர்.

அன்புச்செல்வத்தை மீட்ட போலீஸார்
அன்புச்செல்வத்தை மீட்ட போலீஸார்

நிலக்கோட்டை டி.எஸ்.பி சுகுமாரிடம் பேசினோம். ``கடத்தப்பட்டவரை விரைந்து செயல்பட்டு மீட்டிருக்கிறோம். இவ்வழக்கில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அன்புச்செல்வம் கடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம். அவரே கடத்தல் நாடகம் ஆடியதாகத் தெரியவந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism