Published:Updated:

`தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி; பெங்களூருவில் கைதான மூவர்!’ - க்யூ பிரிவு போலீஸார் அதிரடி

தென்னிந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மூவரை பெங்களூருவில் வைத்து தமிழக போலீஸாரால் கைது செய்துள்ளனர்.

கைது
கைது

தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் பயங்கரவாத கும்பல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த வாய்ப்புண்டு என உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்தது மற்றும் கொலை வழக்கு என இரு வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் மீது போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. இந்த மூவரையும் தமிழக போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். க்யூ பிரிவு போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ்
போலீஸ்

கடந்த இரண்டு மாதங்களாக இவர்கள் குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால் போலீஸார் திணறி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் சென்னையில் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த முகமது அலிகான், இம்ரான் கான், முகமது சையத் ஆகிய மூன்று பேரையும் க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் சில ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவிலிருந்து மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்த க்யூ பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுபடி கைதான மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். க்யூ பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை மூவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைது
கைது

இந்த மூவரும் தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகத் தேடப்பட்டு வரும் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோரை வெளிநாடு தப்பி செல்ல இந்த மூவரும் உதவியது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு வேறுயாருடனாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.