Published:Updated:

வங்கதேசம்: இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள்; பதற்றம்... நடந்தது என்ன?

வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள் ( ட்விட்டர் )

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள இந்துக் கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள இஸ்கான் ராதகாந்தா கோயில் மீது சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை வங்கதேச இந்துக்களின் குரல் என்ற அமைப்பு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்து அமெரிக்கன் அறக்கட்டளை இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மார்ச் 17 அன்று இரவு 8 மணிக்கு டாக்காவிலுள்ள வாரி தானா பகுதியில் உள்ள இஸ்கான் கோயிலை ஹாஜி ஷஃபியுல்லா தலைமையில் 150 பேர் தாக்கியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் மூன்று இந்து பக்தர்கள் காயமடைந்தனர். கோயிலில் இருந்த விலை மதிப்புமிக்க நகைகள், பொருள்கள், பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள்
வங்கதேசத்தில் இந்துக் கோயிலைத் தாக்கிய மர்ம நபர்கள்
ட்விட்டர்

இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், இது குறித்து "இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு ஐ.நா போன்ற அமைப்புகள் எதுவும் கூறுவதில்லை'' என்று தனது கண்டனத்தை முன்வைத்தார். மேலும் இது தொடர்பாக பல்வேறு நபர்களும் இந்து அமைப்புகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததால், சேதப்படுத்தப்பட்ட கோயிலின் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராகவும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர் சிறுபான்மையினராகவும் வாழ்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.