Published:Updated:

`இரட்டை இலைச் சின்னம்' லஞ்ச வழக்கு; சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை - 20 சொகுசு கார்கள் பறிமுதல்!

சுகேஷ் சந்திரசேகர்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூர் பகுதியிலுள்ள சுகேஷ் சந்திரசேகர் பண்ணை வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 20 சொகுசு கார்கள், லேப்டாப், பணம், வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

`இரட்டை இலைச் சின்னம்' லஞ்ச வழக்கு; சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை - 20 சொகுசு கார்கள் பறிமுதல்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூர் பகுதியிலுள்ள சுகேஷ் சந்திரசேகர் பண்ணை வீட்டில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 20 சொகுசு கார்கள், லேப்டாப், பணம், வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Published:Updated:
சுகேஷ் சந்திரசேகர்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு காரணமாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திடம் சின்னத்தை மீட்க பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம் டி.டி.வி தினகரன் தரப்பு டீல் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், அவரின் கூட்டாளிகள், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு மட்டுமல்லாமல் சுகேஷ் சந்திரசேகர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013-ம் ஆண்டு போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் சுகேஷ் சந்திரசேகரும், அவரின் தோழி நடிகை லீனா மரியா பாலும் கைதுசெய்யப்பட்டனர்.

'இரட்டை இலை' சின்னம்
'இரட்டை இலை' சின்னம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திகார் சிறையிலிருக்கும் சுகேஷ் சந்திரசேகரின் பண்ணை வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூரில் உள்ளது. இந்த வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 20 சொகுசு கார்கள், லேப்டாப்கள், பணம், வழக்குக்குத் தேவையான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பண்ணை வீட்டுக்குள் எளிதில் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக உயரமான மதில் சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுகேஷ் சந்திரசேகரை யார், யார் சந்தித்தார்கள் என்ற விவரங்களை சேகரிக்க, சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism