Published:Updated:

ஆற்காடு டு சென்னை - திமுக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு!

வருமான வரித்துறை

ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் திமுக பிரமுகருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது.

ஆற்காடு டு சென்னை - திமுக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் ஐ.டி ரெய்டு!

ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் திமுக பிரமுகருடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது.

Published:Updated:
வருமான வரித்துறை

ராணிபேட்டை ஆற்காடு பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான ஏ.வி.சாரதி வீடு, அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக சென்னை புரசைவாக்கத்திluள்ள ஃபைனான்ஸியர் சுரேஷ் லால்வானி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சுரேஷின் மகன், கட்டுமான நிறுவனத்தை நடத்திவருகிறார். இவருக்கும் ஏ.வி.சாரதி நடத்திவரும் நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.டி
ஐ.டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து வருமான வரித்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி சென்னை ஆலந்தூரிலுள்ள தாது மணல் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கரணைப் பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இவர், கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அதனால் இவரின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர செங்கல்பட்டு எருமையூர் பகுதியிலுள்ள கல்குவாரியிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்தச் சோதனைக்கும் திமுக பிரமுகர் ஏ.வி.சாரதி தரப்பு நடத்திவரும் கல்குவாரிக்கும் தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். சோதனை முடிவில்தான் முழுவிவரம் தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வருமான வரித்துறை சோதனையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism