Published:Updated:

`அலமாரியில் கட்டுகட்டாகப் பணம்'- கரூர் கொசுவலை நிறுவனத்தில் ரூ.32 கோடி பறிமுதல் செய்த ஐ.டி!

கரூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதில் ரூ.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 பணம்
பணம்

கரூரை சேர்ந்த தொழிலதிபர் சிவசாமி. செம்மடை மற்றும் சின்னதாராபுரம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் இவருக்குச் சொந்தமான ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இவரின் ஆலையில் தயாராகும் கொசுவலை இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் ரூபாய் 500 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படும் இவரது ஆலை வருமான வரி ஏய்ப்பு செய்துவருவதாக தகவல் வெளியானதை அடுத்து 20 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த ஆரம்பித்தனர்.

#Raid Update- சேலத்திலும் ரெய்டு!
#Raid Update- சேலத்திலும் ரெய்டு!

5 கார்களில் வந்த 20 வருமான வரித்துறை அதிகாரிகள் வெண்ணெய்மலை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாளாக சோதனை நடத்தினர். இந்நிலையில் தொழில் அதிபரின் வீட்டில் உள்ள அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.32 கோடி ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரித் தொடர்பான ஆவணங்கள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொசுவலை தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோதனை குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.