Published:Updated:

தேனி: யானைத் தந்தம் கடத்தல்; குற்றவாளிகள், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு சிக்கினார்களா!

குற்றவாளிகள்

முழுமையாக விசாரித்தால் மட்டுமே எங்கிருந்து தந்தம் கொண்டுவரப்பட்டது. யாரிடம் விற்க முயன்றனர் என்பது தெரியவரும். முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் குற்றவாளிகள் விலை கேட்டதாகக் கூறப்படுவது...

தேனி: யானைத் தந்தம் கடத்தல்; குற்றவாளிகள், முன்னாள் வனத்துறை அதிகாரியிடம் விலை கேட்டு சிக்கினார்களா!

முழுமையாக விசாரித்தால் மட்டுமே எங்கிருந்து தந்தம் கொண்டுவரப்பட்டது. யாரிடம் விற்க முயன்றனர் என்பது தெரியவரும். முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் குற்றவாளிகள் விலை கேட்டதாகக் கூறப்படுவது...

Published:Updated:
குற்றவாளிகள்

தேனி மாவட்டம், பெரியகுளம் - வத்தலகுண்டு சாலையில் யானைத் தந்தங்கள் கடத்திவரப்படுவதாக, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜ் மற்றும் பெரும்பள்ளம் வனத்துறையினர் 25 பேர் மூன்று குழுக்களாகப் பிரிந்து தேனி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் சந்தேகிக்கும்படி கும்பலாக இருந்தவர்களைச் சோதனை செய்ததில், அவர்கள் இரண்டு யானைத் தந்தங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களைக் கைதுசெய்ய முற்பட்டபோது பெரும்பள்ளத்தைச் சேர்ந்த வனக்காவலர் கருப்பையா என்பவரை, யானைத் தந்தம் விற்பனைக் கும்பல் அடித்துத் தள்ளிவிட்டத்தில், அவருக்கு இடுப்புப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

 கைதானவர்கள்
கைதானவர்கள்

இதற்கிடையே இரண்டு யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (35), பிரகாஷ் (29), பாக்கியராஜ் (30), முத்தையா (57), உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42), தேனியைச் சேர்ந்த சரத்குமார் (30), விஜயகுமார் (60) வத்தலக்குண்டைச் சேர்ந்த அப்துல்லா (34) ஆகிய ஒன்பது பேரைக் கைதுசெய்து தேவதனப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். யானைத் தந்த விற்பனையில் முக்கியக் குற்றவாளியான சுரேஷ் தப்பினார். அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜாவிடம் கேட்டோம். ``ரகசியத் தகவலின் அடிப்படையில்தான் யானைத் தந்தம் கடத்தியவர்களைப் பிடித்தோம். அவர்கள் பல்வேறு வாகனங்களைப் பயன்படுத்தி, தந்தத்தைக் கடத்தியுள்ளனர். நாங்கள் அவர்களைப் பிடிக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்தனர். இதில் ஒருவரைத் தவிர தொடர்புடைய அனைவரையும் கைதுசெய்துவிட்டோம்.

அவர்களிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே எங்கிருந்து தந்தம் கொண்டுவரப்பட்டது, யாரிடம் விற்க முயன்றனர் என்பது தெரியவரும். மேலும், முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் குற்றவாளிகள் விலை பேசியதாகக் கூறப்படும் தகவல் தவறானது. அதேபோல போடி ஜமீனிலிருந்து கொண்டுவந்து விற்க முயன்றனர் என வெளிவரும் தகவல்களும் உண்மையில்லை'' என்றார்.

கடத்தல்
கடத்தல்

இதற்கிடையே தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கைது செய்தவர்களை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறி தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகம் முன்பு கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதித் தொடர்ந்து வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரையும் உறவினர்கள் முன்பு நிறுத்தி, யாரையும் அடித்துத் துன்புறுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாகனத்தில் ஏற்றிப் புறப்பட்டார். அப்போதும் உறவினர்கள் வாகனத்தை மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism