Published:Updated:

`முகத்தில் ஸ்ப்ரே; நாடி பிடித்துப் பார்த்த கூலிப்படை!'-ஜே.கே.புதியவன் வழக்கில் கைதான டிரைவர் படுகொலை

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனைக் கொலை செய்த வழக்கில் அவரின் கார் டிரைவர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்த பாஸ்கரின் முகத்தில் ஸ்ப்ரேவை அடித்து, நேற்றிரவு கொலை செய்துள்ளனர்.

`முகத்தில் ஸ்ப்ரே; நாடி பிடித்துப் பார்த்த கூலிப்படை!'-ஜே.கே.புதியவன் வழக்கில் கைதான டிரைவர் படுகொலை

ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனைக் கொலை செய்த வழக்கில் அவரின் கார் டிரைவர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்த பாஸ்கரின் முகத்தில் ஸ்ப்ரேவை அடித்து, நேற்றிரவு கொலை செய்துள்ளனர்.

Published:Updated:

தென்னக ரயில்வேயில் ஏ.ஐ.ஓ.பி.சி யூனியனில் நீண்ட காலமாக பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஜே.கே.புதியவன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், புதியவனின் கார் டிரைவர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டார். பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில், 'ரயில்வே பணிக்காக குறிப்பிட்ட தொகையை புதியவனிடம் கொடுத்தேன். ஆனால் அவர், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. மேலும், என்னை அவமானப்படுத்தியதால் அவரைக் கொலை செய்தேன்' எனக் கூறியிருந்தார்.

j.k.puthiyavan
j.k.puthiyavan

சிறையில் அடைக்கப்பட்ட பாஸ்கர், சில மாதங்களுக்குமுன் ஜாமீனில் வெளியில் வந்தார். வில்லிவாக்கத்தில் வாடகைக் கார் ஓட்டிவந்தார். புதியவனின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க அவரின் உறவினர்கள் பாஸ்கருக்கு ஸ்கெட்ச் போட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்றிரவு பாஸ்கர் தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். பலராமபுரம் 4-வது தெருவில் அவர் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்இமைக்கும் நேரத்தில் அந்தக் கும்பல் பாஸ்கரின் முகத்தில் மயக்க ஸ்ப்ரேவை அடித்தது. இதனால் பாஸ்கர் நிலைதடுமாறினார். பிறகு, கத்தி, அரிவாளால் பாஸ்கரின் முகம் மற்றும் இரண்டு கைகளிலும் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் பாஸ்கர் கீழே விழுந்தார். பாஸ்கர் இறந்துவிட்டாரா என்பதை உறுதிசெய்ய நாடி பிடித்துப் பார்த்த பிறகு, அந்தக் கும்பல் தப்பியுள்ளது.

murder spot
murder spot

இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் அகஸ்டின் ரவி சுதாகர் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பாஸ்கரின் சடலத்தைக் கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதியவன் கொலைக்கு பழிக்குப் பழியாகவே பாஸ்கர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``வில்லிவாக்கம் பலராமபுரம் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர், பாஸ்கர் (42). இவர்மீது புதியவனைக் கொலை செய்த வழக்கு ஐ.சி.எப் காவல் நிலையத்தில் உள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் பாஸ்கரைக் கொலை செய்துள்ளது. பாஸ்கரை கொலை செய்தது கூலிப்படை என்று தெரியவந்துள்ளது. கூலிப்படையை ஏவியது புதியவனின் உறவினர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை. கொலையாளிகளைப் பிடித்த பிறகுதான் பாஸ்கர் கொலை செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

murder spot
murder spot

கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்துவருகிறோம். அதில் கொலையாளிகளின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆனால், புதியவனின் உறவினர்கள் யாரும் கொலை நடந்த இடத்துக்கு வரவில்லை" என்றார்.