Election bannerElection banner
Published:Updated:

சென்னை: ஒருதலைக் காதல்; இளம்பெண்ணுக்குக் கத்திக்குத்து! - இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தண்டனை
தண்டனை

சென்னையில் ஒருதலையாகக் காதலித்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை, அமைந்தகரை எஸ்.எஸ்.சாகிப் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (23) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். 12.5.2014-ல் ஆயிரம் விளக்கு ஹடோஸ் சாலையில் சரஸ்வதி தனியாக நடந்து வந்தபோது கொளத்தூரைச் சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் வழிமறித்திருக்கிறார். பின்னர் சரஸ்வதியிடம் தன்னைக் காதலிக்கும்படி கூறி வற்புறுத்திருக்கிறார். சரவணனின் காதலை சரஸ்வதி ஏற்கவில்லை.

 கொலை
கொலை
representational image
சென்னை: மாணவிமீது ஒருதலைக் காதல்! - உதவிப் பேராசிரியரைச் சிக்கவைத்த போலி திருமணச் சான்றிதழ்

அதனால் ஆத்திரமடைந்த சரவணன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரஸ்வதியைக் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். உயிருக்குப் போராடிய சரஸ்வதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரஸ்வதி உயிர்பிழைத்துக்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சரவணனைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சரவணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கைத் திறம்படக் கையாண்ட ஆயிரம் விளக்கு போலீஸாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு