Published:Updated:

சேலத்தில் நரியை வைத்து ஜல்லிக்கட்டு... இரு கிராமங்கள்மீது வனத்துறையினர் வழக்கு பதிவு!

வங்காநரி ஊர்வலம்

சேலத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஒருசில கிராமங்களில் வங்கா நரியைப் பிடித்துவந்து, ஊர்வலமாக அழைத்துவருவது வழக்கமாக இருந்து வருகிறது.

சேலத்தில் நரியை வைத்து ஜல்லிக்கட்டு... இரு கிராமங்கள்மீது வனத்துறையினர் வழக்கு பதிவு!

சேலத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஒருசில கிராமங்களில் வங்கா நரியைப் பிடித்துவந்து, ஊர்வலமாக அழைத்துவருவது வழக்கமாக இருந்து வருகிறது.

Published:Updated:
வங்காநரி ஊர்வலம்

பொங்கல் என்றாலே வீரத்துக்கு அடையாளமான ஜல்லிக்கட்டு எல்லோருக்கும் நினைவில்வரும். ஜல்லிக்கட்டுனா எப்போதும் காளையை அடக்குவதைதான் நாம பார்த்திருப்போம். ஆனா சேலத்தில் ஒருசில குறிப்பிட்ட கிராமத்தில் வங்கா நரியைப் பிடித்துவந்து ஓடவிட்டுப் பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்திவருகின்றனர்.

இது குறித்து விசாரித்தபோது, `சேலம்னாலே வங்காநரி ஜல்லிக்கட்டுதான் ஃபேமஸ்' என்கின்றனர் சேலத்தைச் சேர்ந்த மக்கள். அப்படிச் சமீபத்தில் நடந்துமுடிந்த பொங்கல் விழாவை முன்னிட்டு சேலத்தில் ஒருசில கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்கிறதாம். `நரி முகத்தில் முழிச்சா நல்ல யோகம் வரும்’ என்பதை நம்பி இன்னும் சில கிராமங்களில் காணும் பொங்கலன்று வங்காநரியைக் காட்டிலிருந்து பிடித்துவந்து `ஊருக்கு நல்ல விமோச்சனம் கிடைக்கணும்’னு வேண்டி ஊர்வலமாக அழைத்துவருகின்றனர்.

சேலத்தில் நரியை வைத்து ஜல்லிக்கட்டு... இரு கிராமங்கள்மீது வனத்துறையினர் வழக்கு பதிவு!

அவ்வாறு அழைத்துவரும் நரியை ஊருக்கு மத்தியில் ஓடவிட்டு அதை இளைஞர்கள் பிடிப்பது என்பது ஒரு போட்டியாக நடத்தப்பட்டுவருகிறது. இதற்கு இளைஞர்கள் வருடாவருடம் போட்டிக்கு முன்பே தங்களைத் தயார்படுத்திக்கொண்டு களத்துக்கு வருவதால், இதை ஜல்லிக்கட்டு என்றே அழைத்துவருகின்றனர். இது போன்று சிறிய விலங்கினங்களைக் கொடுமைப்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தரப்பில் நினைவுறுத்தப்பட்டுவருகிறது. இருந்தாலும் ஒருசில பகுதிகளில் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில், வங்காநரியைப் பிடித்துவந்து வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவந்து ஊர் மையப் பகுதியிலுள்ள மகாசக்தி மாரியம்மன் கோயிலைச் சுற்றிவந்து வழிபாடு செய்திருக்கின்றனர் அந்தக் கிராமத்து மக்கள். இந்தத் தகவல் அறிந்து வாழப்பாடி வனத்துறை அதிகாரி துரைமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று வங்கா நரியை மீட்டிருக்கின்றனர்.

சேலத்தில் நரியை வைத்து ஜல்லிக்கட்டு... இரு கிராமங்கள்மீது வனத்துறையினர் வழக்கு பதிவு!

மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வனத்துறை எச்சரிக்கையை மீறி நேற்று சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நரியைப் பிடித்துவந்திருக்கின்றனர். பின்னர் கொட்டாவாடியில் வழக்கு பதிவுசெய்திருப்பதை அறிந்த கிராம மக்கள் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இந்த இரண்டு கிராமங்கள் மீதும் வனத்துறையினர் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.