Published:Updated:

``கொடநாடு எஸ்டேட்டில் இருந்தது என்ன?" - ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

``கொடநாடு எஸ்டேட்டில் இருந்தது என்ன?" - ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

Published:Updated:
ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துவருகிறது. கடந்த வாரம் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சஜ்ஜீவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொடநாடு
கொடநாடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்று சஜ்ஜீவனின் சகோதரர் சிபியிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூங்குன்றன் 15 ஆண்டுகளுக்கு மேல், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். போயஸ் கார்டன், கொடநாடு என்று ஜெயலலிதா எங்கு சென்றாலும், அவரின் நிழல்போல உடன் பயணித்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும்.

பூங்குன்றன்
பூங்குன்றன்

கொடநாடு வழக்கைப் பொறுத்தவரை, அங்கு திருடப்பட்ட விஷயம் குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதாகவும், பணம், பொருள்கள் திருடப்பட்டிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் எஸ்டேட் குறித்து நன்கறிந்த சசிகலாவிடம் கொடநாட்டில் என்னனென்ன பொருள்கள் இருந்தன என்று போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு சசிகலா சில பதில்களை வழங்கியுள்ளார். அதேபோல கொடநாடு எஸ்டேட் குறித்து சஜ்ஜீவனும் நன்கறிந்தவர்.

சசிகலா
சசிகலா

அவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், “கொடநாடு எஸ்டேட்டில் என்னென்ன மாதிரியான பொருள்கள் இருந்தன, ஜெயலலிதா அறையில் என்னென்ன விஷயங்கள் இருந்தன, எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன” என்று பூங்குன்றனிடம் விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism