Published:Updated:

அழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை!- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்

ரஷ்யாவில் தன்னைவிட தன் தங்கை மிகவும் அழகாக இருந்ததால் அவர் மீது பொறாமைப்பட்டு, அக்காவே தங்கையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சகோதரிகள்
சகோதரிகள் ( East2west News )

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரைச் சேர்ந்தவர்கள் எலிசவெட்டா டுப்ரோவினா (22), ஸ்டெபனியா டுப்ரோவினா (17) என்ற சகோதரிகள். இவர்கள் தங்கள் சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர்கள். தன் அத்தை எகடேரினாவின் (Ekaterina) ஆதரவில், குழந்தைகள் நலக் காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளனர்.

கொலை செய்த எலிசவெட்டா
கொலை செய்த எலிசவெட்டா
East2west News

இவர்கள் இருவரும் இணை பிரியாத சகோதரிகளாக இருந்து வந்துள்ளனர். தாங்கள் வளர்ந்த பிறகு ஆசிரமத்தை விட்டு வெளியேறி மாடலிங் துறையைத் தேர்வு செய்து அதில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் இந்த இரு மாடல்களும் பிரபலமானவர்களாக வலம் வந்துள்ளனர்.

என்னதான் இருவரும் தாய், பிள்ளையாகப் பழகி வந்தாலும் மூத்த சகோதரி எலிசவெட்டாவுக்குத் தன் தங்கை ஸ்டெபனியா மீது உள்மனதில் சற்று பொறாமை இருந்து வந்துள்ளது. தன்னை விட ஸ்டெபனியா அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததால், எலிசவெட்டாவைவிட ஸ்டெபனியாவுக்கு மாடலிங் துறையில் அதிக வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. மேலும், இவ்வளவு சிறிய வயதில் அழகு, வாய்ப்பு, புகழ் என அனைத்தையும் பெற்று வந்த தங்கை பார்த்து, எலிசவெட்டா பொறாமையின் உச்சத்துக்குச் சென்றுள்ளார்.

கொலையான ஸ்டெபனியா
கொலையான ஸ்டெபனியா
East2west News

தன் தங்கையைப் பழிவாங்க தக்க சமயம் பார்த்துக் காத்திருந்துள்ளார் எலிசவெட்டா. கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் தன் காதலர் அலெக்ஸி ஃபதேவ்வைச் (Alexey Fateev) சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஸ்டெபனியா. அவருடன் எலிசவெட்டாவும் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அலெக்ஸி வெளியில் சென்றுள்ளார். அப்போது எலிசவெட்டாவும், ஸ்டெபனியாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

`கர்ப்பம்... காட்டைவிட்டு வெளியேற பயம்'- இந்தோனேசியாவில்  ஒரங்குட்டானுக்கு நிகழ்ந்த கொடூரம்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட எலிசவெட்டா, திடீரென தன் தங்கையைக் கீழே தள்ளி அவரது முகம், கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல் ஸ்டெபனியாவின் ஒரு காதை அறுத்து, கண்களைத் தோண்டியுள்ளார். சுமார் 189 தடவை தங்கையைக் கத்தியால் குத்தியுள்ளார் எலிசவெட்டா. அதற்குள் வெளியில் சென்ற அலெக்ஸி வீட்டுக்குத் திரும்ப, வீட்டில் ஸ்டெபனியா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சகோதரிகள்
சகோதரிகள்
East2west News

உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் எலிசவெட்டாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு மனநல சிகிச்சைகள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசவெட்டாவின் சிகிச்சைகள் தற்போது முடிவடைந்ததால் அவர் மீது நிலுவையிலிருந்த கொலை வழக்கு தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் எலிசவெட்டாதான் கொலை செய்தார் என அனைத்து ஆதாரங்களும் உறுதியான நிலையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை பற்றிப் பேசியுள்ள சகோதரிகளின் அத்தை எகடேரினா, ``ஸ்டெபனியாவை, எலிசவெட்டா கொலை செய்துவிட்டார் என்ற செய்தி அறிந்ததும் என் ரத்தம் உறைந்துவிட்டது. எலிசவெட்டா இவ்வளவு பொறாமையுடன் இருப்பாள் என நாங்கள் சற்றும் நினைக்கவில்லை.

எலிசவெட்டா
எலிசவெட்டா
East2west News

ஆனால், தன் தங்கை ஸ்டெபனியா உடுத்தும் உடைகளையே எலிசவெட்டாவும் உடுத்துவார். அழகு சாதன பொருள்கள், லிப்ஸ்டிக் நிறம், தலைமுடி போன்ற ஸ்டெபனியா செய்யும் அனைத்தையும் அப்படியே எலிசவெட்டாவும் நிறம் மாறாமல் செய்து வந்தார். சகோதரியின் பாசத்தால் இப்படிச் செய்கிறார் என நினைத்தோம். ஆனால், அவரது மனதிலிருந்த வன்மத்தை இப்போதுதான் தெரிந்துகொண்டோம்” எனக் கூறியுள்ளார்.