Published:Updated:

சேலம்: `கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்’ - வீடியோ வெளியிட்டுவிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை

தற்கொலை

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சேலத்தைச் சேர்ந்த தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: `கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்’ - வீடியோ வெளியிட்டுவிட்டு நகை மதிப்பீட்டாளர் தற்கொலை

கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என சேலத்தைச் சேர்ந்த தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

சேலம் அம்மாப்பாளையம், பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் ஸ்ரீரங்கப்பாளையத்தில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக இருந்துவருகிறார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மோகன்தாஸின் மனைவி போலீஸாருக்குத் தகவல் அளிக்காமலேயே, உறவினர்களுக்குத் தன் கணவர் நெஞ்சுவலியில் இறந்துவிட்டதாகத் தகவல் அளித்திருக்கிறார். இதற்கிடையே மோகன்தாஸின் செல்போனிலிருந்து வீடியோ ஒன்று வெளியே பரவ ஆரம்பித்தது.

மோகன்தாஸ்
மோகன்தாஸ்

அதில் மோகன்தாஸ், ``தற்கொலை செய்வதற்கு முன்பு இந்த வீடியோவைப் பதிவு செய்கிறேன். நான் இத்தனை ஆண்டுக்காலமாக சம்பாதித்த பணத்தை என் மனைவி இமாகுலேட் மேரியிடம் கொடுத்து வந்தேன். அவரிடமிருந்து, எங்கள் பகுதியில் வசித்துவரும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ-ஆகப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற சேகர் என்பவரின் மனைவி சாந்தி, மகள் சுபா ஆகியோர் அடிக்கடி கஷ்டத்துக்காகப் பணம் கேட்டு வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தை அடிக்கடி கேட்டுப் பார்த்தும் அவர்கள் கொடுக்க முற்படவில்லை. இதனால், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன்.

ஆனால், சேகர் அதே காவல் நிலையத்தில் வேலை பார்ப்பதால், என்னுடைய மனுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கவில்லை. இதனால் முதலமைச்சர் அலுவலகம், டி.ஜி.பி அலுவலகத்துக்கு மனு அளித்தேன். ஆனால் அதிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். அவர்களுடைய கல்விச் செலவுக்குக்கூடப் பணம் இல்லாமல் தவித்துவருகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலமுறை பணத்தைத் திருப்பித் தரக் கூறி கேட்டுப் பார்த்தும் எந்தவிதப் பலனும் இல்லை. இவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வீடியோ போலீஸாரின் கைக்குக் கிடைத்ததும், மோகன்தாஸின் வீட்டுக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “மோகன்தாஸ் மரணம் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கணவர் தற்கொலை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் குறித்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தாரை விசாரித்துவருகிறோம். மேலும் மோகன்தாஸ் செல்போனிலிருந்து வெளியான வீடியோவை வைத்து விசாரித்துவருகிறோம்” என்று கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism