Published:Updated:

வேலூர்: அடகுக்கடைச் சுவரில் துளையிட்டு புகுந்த கும்பல்... ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை!

கொள்ளையர்கள் போட்ட துளை

வேலூர் அருகே அடகுக்கடைச் சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

வேலூர்: அடகுக்கடைச் சுவரில் துளையிட்டு புகுந்த கும்பல்... ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை!

வேலூர் அருகே அடகுக்கடைச் சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.75 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Published:Updated:
கொள்ளையர்கள் போட்ட துளை

வேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்திலிருக்கிறது திருவள்ளுவர் பல்கலைக்கழகம். இதன் அருகிலுள்ள கூட்ரோடு பகுதியில், ‘இந்துமதி பாண்டு’ என்ற பெயரில் அனில்குமார் என்பவர் நகை அடகுக்கடை நடத்திவருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இன்று காலை, கடையைத் திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடகுக்கடைக்கு அருகிலுள்ள ஜூஸ் கடையின் பின்பக்கச் சுவரைத் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பக்கவாட்டுச் சுவரையும் துளையிட்டு அடகுக் கடைக்குள் புகுந்திருக்கிறார்கள். லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 750 கிராம் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளிப்பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக கடை உரிமையாளர் அனில்குமார் தெரிவித்திருக்கிறார்.

நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்
நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் கொள்ளைக் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால், மாட்டிகொள்ளாமல் இருப்பதற்காக, புத்திசாலித்தனமாக சிசிடிவி-யின் ஹார்டு டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கொள்ளை நடந்த கடையை வேலூர் ஏடி.எஸ்.பி சுந்தரமூர்த்தி, காட்பாடி டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலீஸார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மேலும் சில சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வுசெய்துவருகிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism