Published:Updated:

நடிகையை சுட்டுக்கொன்ற வழிப்பறி கொள்ளையர்கள்; தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கிச்சூடு

மேற்கு வங்கத்தின் தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்டைச் சேர்ந்த நடிகை ரியா குமாரி, வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நடிகையை சுட்டுக்கொன்ற வழிப்பறி கொள்ளையர்கள்; தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்கத்தின் தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்டைச் சேர்ந்த நடிகை ரியா குமாரி, வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு

மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையர்களால் நடிகை ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட நடிகை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரியா குமாரி என்றும், திரைப்பட தயாரிப்பாளர் பிரகாஷ் குமாரின் மனைவி என்றும் தெரியவந்திருக்கிறது.

மரணம்
மரணம்
சித்தரிப்புப் படம்

முன்னதாக ரியா குமாரி தன்னுடைய கணவர், இரண்டு வயது மகளுடன், தேசிய நெடுஞ்சாலை எண் 16 வழியாக கொல்கத்தா நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே சற்று இளைப்பாறுவதற்காக நின்றிருக்கின்றனர். திடீரென அங்கு வந்த மூன்று பேர், அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்ய முயன்றிருக்கின்றனர். அப்போது கணவனைக் காப்பாற்ற முயன்ற ரியா குமாரியை கொள்ளையர்கள் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

வழிப்பறி கொள்ளையர்களால் நடிகை சுட்டுக் கொலை
வழிப்பறி கொள்ளையர்களால் நடிகை சுட்டுக் கொலை
சித்திரிப்புப் படம்

பின்னர் ரியா குமாரியின் கணவர் அவரை காரில் ஏற்றிக்கொண்டு உதவி தேடிச் சென்றுகொண்டிருந்தபோது, குல்காச்சியா-பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் பார்த்த சிலரிடம் நடந்ததைக் கூறியிருக்கிறார். அதையடுத்து, உலுபெரியாவிலுள்ள எஸ்.சி.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ரியா குமாரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து போலீஸார், சம்பவம் தொடர்பாக நடிகையின் கணவரிடம் விசாரணை நடத்திவருவதாகவும், தடயவியல் பரிசோதனைக்காக அவர்களின் கார் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.