Published:Updated:

`30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்!’-வேலூரில் சிக்கிய ஜார்க்கண்ட் நக்சலைட்டின் பின்னணி!

பிடிபட்ட நக்சலைட்
News
பிடிபட்ட நக்சலைட்

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நக்சலைட் வேலூரில் பிடிபட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரின் மையப் பகுதியிலிருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையான சி.எம்.சி-க்குள், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நக்சலைட் வீரேந்திரகுமார் யாதவ் பதுங்கியிருப்பதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த லேட்ஹர் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக வேலூர் விரைந்த ஜார்க்கண்ட் போலீஸார், இன்று மாலை 4 மணியளவில் சி.எம்.சி மருத்துவமனையை வந்தடைந்தனர். மருத்துவமனைக்குள் பதுங்கியிருந்த நக்சலைட் வீரேந்திரகுமார் யாதவை அதிரடியாகக் கைதுசெய்து, அருகிலிருக்கும் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணனிடம் உத்தரவு பெற்று, ‘என்ன நோக்கத்துக்காக அவர் வேலூர் வந்தார்?’ என்பது குறித்து காவல் நிலையத்திலேயே வைத்து விசாரணை நடத்தினர்.

சி.எம்.சி மருத்துவமனை
சி.எம்.சி மருத்துவமனை

54 வயதான தன் தந்தை ராம்பிரசாத் யாதவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 11-ம் தேதியிலிருந்து சி.எம்.சி-யில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் பார்ப்பதற்காக வேலூர் வந்ததாக அவர் கூறியிருக்கிறார். பிடிபட்ட வீரேந்திரகுமார் யாதவ்மீது கொலை, கொலை முயற்சி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். விசாரணை நிறைவடைந்த பின்னர், இன்று இரவே வீரேந்திரகுமார் ஜார்க்கண்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். வேலூரில், நக்சலைட் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz