Published:Updated:

₹1.50 லட்சம் கையாடல்; பால் கூட்டுறவுச் சங்க செயலாளர் சஸ்பெண்ட்!

பால் கேன்கள்
பால் கேன்கள்

பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை, கறவைப் பசு கடன் தொகை ஆகியவற்றிலிருந்து முறைகேடாகப் பணம் கையாடல் செய்த புகாரில், பால் கூட்டுறவுச் சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபு. இவர், கடந்தாண்டுப் பிப்ரவரி மாதம் பால் கேன்கள் வாங்கிய கணக்கிலிருந்து 42,000 ரூபாயையும், உள்ளூரில் பால் விற்பனை செய்யப்பட்ட தொகையிலிருந்து மூன்று லட்சம் ரூபாயையும் கையாடல் செய்துவிட்டதாக ஏகப்பட்டப் புகார்கள் குவிந்தன.

பணம் (மாதிரி படம்)
பணம் (மாதிரி படம்)

அதிகாரிகளின் விசாரணையைத் தொடர்ந்து, கோபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார். இவர் செய்த முறைக்கேடுகளுக்கு சங்கச் செயலாளர் மோகனும் உடந்தையாக இருந்ததாகப் பால் உற்பத்தியாளர்கள் தரப்பிலிருந்து புகார் வாசிக்கப்பட்டதால், கூட்டுறவு சரக முதுநிலை ஆய்வாளர் விசாரணையில் இறங்கினார்.

அதில், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய ஊக்கத்தொகை மற்றும் கறவைப் பசு கடனுக்கான தவணைத் தொகை ஆகியவற்றிலும் கையாடல் நடந்திருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.

Representational Image
Representational Image

தொடர்ந்து, காவேரிப்பட்டுப் பால் கூட்டுறவுச் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளும் தனி அலுவலர் மூலம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வில், 1,50,000 ரூபாயை முறைகேடாக சுருட்டியிருப்பதும் தெரியவந்ததால், பால் கூட்டுறவுச் சங்க செயலாளர் மோகனும், தற்சமயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஆஞ்சி என்பவர் தற்காலிக சங்க செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு