Published:Updated:

சேலம்: பத்திரிகையாளர் பிரபல ரௌடியுடன் கடத்தல்; மர்மக் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

பத்திரிகையாளர், ரௌடி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சேலம்: பத்திரிகையாளர் பிரபல ரௌடியுடன் கடத்தல்; மர்மக் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பத்திரிகையாளர், ரௌடி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published:Updated:
கடத்தல் ( சித்திரிப்புப் படம் )

சேலம், அழகாபுரம் ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரின் மகன் பிரவீன் குமார். `ஹியூமன் ரைட்ஸ் டுடே' எனும் செய்தி நிறுவனத்தில் சேலம் மாவட்ட நிருபராகப் பணியாற்றிவந்திருக்கிறார். நேற்று இரவு இவர் சேலம் கோரிமேடு பிருந்தாவனம் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல ரௌடி பூபதி என்பவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பூபதி மீது சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு மோசடி வழக்குகளும், குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில், ரௌடி பூபதி, பிரவீன் குமார் இருவரும் வீட்டுக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று பூபதி, பிரவீன் குமார் இருவரையும் தாக்கி காரில் ஏற்றிச் சென்றிருக்கிறது.

ரௌடி பூபதி
ரௌடி பூபதி

பிரவீன் குமார் அந்த கார் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரிலிருந்து குதித்திருக்கிறார். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை அவர் திடீரென மாயமாகிவிட்டார். போலீஸார் அவருடைய தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃபில் இருந்திருக்கிறது. மேலும் அவரிடம் போலீஸார் நேற்று இரவு விசாரித்ததில், சுமார் 9 மணியளவில் 10 பேர்கொண்ட கும்பல் தன்னைக் கடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார்.

பிரவீன் குமார்
பிரவீன் குமார்

இது தொடர்பாக அழகாபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பல் யார் என்றும், அவர்களுக்கும் பூபதி, பத்திரிகையாளர் பிரவீன் குமாருக்கும் என்ன தொடர்பு என்கிற கோணத்திலும் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட கார் குறித்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துவருகின்றனர்.