Published:Updated:

ஹரியானா: மணல் மாஃபியாவைப் பிடிக்கச் சென்ற டிஎஸ்பி; லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

டிஎஸ்பி கொலை ( ANI )

ஹரியானாவில் சட்டவிரோத சுரங்க மாஃபியாவைப் பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரி லாரி ஏற்றிக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

ஹரியானா: மணல் மாஃபியாவைப் பிடிக்கச் சென்ற டிஎஸ்பி; லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

ஹரியானாவில் சட்டவிரோத சுரங்க மாஃபியாவைப் பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரி லாரி ஏற்றிக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
டிஎஸ்பி கொலை ( ANI )

ஹரியானாவில், நுஹ் மாவட்டத்தில் டிஎஸ்பி-யாக இருந்தவர் சுரேந்தர் சிங் பிஸ்னோய். இந்த மாவட்டத்திலுள்ள பச்காவ் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாக சுரேந்தர் சிங்குக்குத் தகவல் கிடைத்தது. உடனே சுரேந்தர் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவருடன் நான்கு போலீஸாரும் சென்றனர். சட்டவிரோதமாக மணல் எடுத்துவந்த லாரியை நிறுத்தும்படி சுரேந்தர் சிங் சிக்னல் கொடுத்தார். ஆனால் லாரியை ஓட்டியவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சுரேந்தர் சிங் மீது லாரியை ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுரேந்தர் சிங் உயிரிழந்தார். இது குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சுரேந்தர் சிங்
சுரேந்தர் சிங்

இதில் பச்காவ் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் இக்கார் என்பவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகுதான் இக்கார் கைதுசெய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ``இக்கார் உண்மையில் லாரி டிரைவர் கிடையாது. லாரி கிளீனர். போலீஸ் அதிகாரி வண்டியில் வருவதைப் பார்த்தவுடன் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி கிளீனர், வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றார். வண்டியை நிறுத்தும்படி சுரேந்தர் சிங் சொல்லிப்பார்த்தார். ஆனால் அதைக் கேட்காமல் சுரேந்தர் சிங் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டார்” எனக் கூடுதல் டிஜிபி சந்தீப் கிர்வார் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போலீஸ் அதிகாரியை மணல் மாஃபியாக்கள் லாரி ஏற்றிக் கொலைசெய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹரியானா முதல்வர் மனோகர் லால், ``மணல் மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அதோடு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். மேலும் கொலைசெய்யப்பட்ட போலீஸ் அதிகாரி தியாகியாகக் கருதப்படுவார்” என்றும் தெரிவித்தார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்
ANI

மணல் மாஃபியாக்களால் கொலைசெய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுரேந்தர் சிங் அடுத்த சில மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார். ஹிசார் மாவட்டத்திலுள்ள சரங்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் 1994-ம் ஆண்டு உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு வரை குருஷேத்ராவில் பணியாற்றிய சுரேந்தர் சிங், 2019-ம் ஆண்டுதான் டிஎஸ்பி-யாகப் பதவி உயர்வு பெற்று சஹாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம்தான் அங்கிருந்து நுஹ் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடமாற்றம் கிடைத்த ஒரு மாதத்துக்குள் மணல் மாஃபியாக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து மணல் கடத்தலைத் தடுக்க மாநில போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.