Published:Updated:

இறந்த பின் தூக்க மாத்திரைகளை திணித்த தாய்.. 3 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த கொலை!

மகனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வசந்தா
மகனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட வசந்தா

லால் கிருஷ்ணனை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு லால் கிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மலையடி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா (49). இவரின் கணவர் பிரிந்து சென்றதால் கடந்த சில ஆண்டுகளாக தன் மகன் லால் கிருஷ்ணன் (13) மற்றும் மகளுடன் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிய மகன் தூக்க மாத்திரை தின்று மயங்கிவிட்டதாக வசந்தா சத்தம்போட்டார்.

அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து லால் கிருஷ்ணனை மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிலைமை மோசமாக இருந்ததால் அங்கிருந்து மெடிக்கல் காலேஜுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு லால் கிருஷ்ணனை சோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு லால் கிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கொலை செய்யப்பட்ட லால் கிருஷ்ணன்
கொலை செய்யப்பட்ட லால் கிருஷ்ணன்

இதைத் தொடர்ந்து வசந்தாவை விட்டுப் பிரிந்து சென்ற கணவன் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி, முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்டவைகளுக்கு புகார் அனுப்பினார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்தியும் போலீஸாருக்கு எந்தச் துருப்புச்சீட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு சுபனன் என்ற 35 வயதுக்காரருக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்தார் வசந்தா. அந்தத் திருமணத்தால் வசந்தா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வசந்தாவையும் அவரின் மருமகன் சுபனனையும் தனித்தனியாக விசாரணை நடத்தியதில் அவர்களுக்குள் கள்ளக்காதல் இருப்பதாகவும் அதற்கு இடையூறாக இருந்த மகனைக் கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து, பளுகல் போலீஸார் லால் கிருஷ்ணனின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றினர். லால் கிருஷ்ணனின் தாய் வசந்தாவையும் சுபனனையும் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுபனன்
கைது செய்யப்பட்ட சுபனன்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வசந்தாவுக்கும் சுபனனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. 2017-ம் ஆண்டு லால் கிருஷ்ணன் பள்ளிக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது தாய் வசந்தாவும் சுபனனும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தாயைத் திட்டியுள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுபனன் அங்கு நாய் கட்டுவதற்காக கிடந்த சங்கிலியை எடுத்து லால் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கியுள்ளார். அதற்கு வசந்தாவும் உதவியுள்ளார். பின்னர் லால் கிருஷ்ணன் சுருண்டு விழுந்ததும், தாய் வசந்தா தூக்க மாத்திரைகளை மகனின் வாயில் திணித்து தண்ணீர் ஊற்றியுள்ளார்.

மகனைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வசந்தா
மகனைக் கொன்றதாக கைது செய்யப்பட்ட வசந்தா

லால்கிருஷ்ணன் இறந்ததை உறுதி செய்ததும் தன் மகன் தூக்கமாத்திரை தின்று மயங்கியதாக நாடகம் ஆடினார். பிரேதப் பரிசோதனையில் லால் கிருஷ்ணனின் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் தூக்க மாத்திரை தொண்டைப் பகுதியில் தேங்கியிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக வயதுகொண்ட சுபனனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்து தொடர்ந்து நெருக்கமாக இருக்கலாம் என வசந்தா முடிவு செய்தார். அந்தத் திருமணம்தான் வசந்தா மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு