Published:Updated:

மாயமான ஸ்மார்ட்போன்; மாறி மாறிப் பேசிய கனகராஜ் சகோதரர்கள்; கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!

கொடநாடு வழக்கில் கனகராஜிடமிருந்த சாட்சியங்களை அழித்ததாக அவரின் சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டன. அ.தி.மு.க ஆட்சியில் முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கு, தி.மு.க ஆட்சியில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கனகராஜின் உடன் பிறந்த சகோதரர் தனபால், சித்தி மகன் ரமேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கனகராஜ்
கனகராஜ்
“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

கொடநாடு மர்மங்களைத் தேடி என்ற பகுதியில், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று ஜூ.வி டீம் விசாரித்தது.

அதில், கனகராஜின் குடும்பத்தினர் மீது அவரின் மனைவி கலைவாணி போலீஸில் சொல்லியிருந்த புகார் குறித்து ஜூ.வி இதழில் வெளியிட்டிருந்தோம். விபத்து நடந்தபோது கனகராஜிடமிருந்து சாதாரண பட்டன் போன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கனகராஜின் சகோதரர்கள் கூறிவந்தனர். கனகராஜிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்
கோப்புப் படம்

விபத்து நடந்த அன்றைய தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோதுகூட கனகராஜ் ஸ்மார்ட்போன் வைத்திருந்தார். விபத்துக்குப் பிறகு அந்த போன் போலீஸாரிடமும் சிக்கவில்லை. கனகராஜின் மனைவியிடமும் செல்லவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த போனில் இருந்துதான், கனகராஜ் வி.வி.ஐ.பி ஒருவருடன் எடுத்த படத்தை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார். இப்படி இந்த வழக்கு தொடர்பான பல ரகசியங்கள் அதில் இருக்கின்றன. அந்த போன் குறித்து கனகராஜ் குடும்பத்துக்கு தெரிந்திருப்பதாகவும்,

கொடநாடு மர்மங்களைத் தேடி | கனகராஜின் கடைசி நிமிடங்கள்; சாட்சிகளின் பகீர் தகவல்! |பகுதி -1
தனபால்
தனபால்

அது குறித்து கலைவாணி கேட்டபோது, 'அவனே போயிட்டான் உனக்கென்ன?' என்று மிரட்டியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீஸார் தனபாலிடமும் ரமேஷிடமும் விசாரணை நடத்திவந்தனர்.

இவர்களுக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள், தகவல்களின் அடிப்படையில், தனபால், ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்தனர். சேலம் ஆத்தூரிலிருந்து இருவரையும் நீலகிரி மாவட்டம், சோலூர் மட்டம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த தனிப்படையினர், தனபால், ரமேஷ் இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உடபட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மாயமான ஸ்மார்ட்போன்; மாறி மாறிப் பேசிய கனகராஜ் சகோதரர்கள்; கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!

பின்னர் ஊட்டியிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, இருவரையும் வருகிற 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு