Published:Updated:

காஞ்சிபுரம்: குளிக்கச் சென்றாள்; சடலமாக மீட்கப்பட்டாள்! - திருமணமான 45 வது நாளில் சோகம்

திருமணமான 45 வது நாளில்உயிரிழந்த செந்தாரகை
திருமணமான 45 வது நாளில்உயிரிழந்த செந்தாரகை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் வெங்கடையா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ஜெயந்தி (43). மாதர் சங்கத் தலைவியாக உள்ளார். இவர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``எனக்கு 2 பெண் குழந்தைகள். மூத்த மகள் செந்தாரகையை (23) உத்திரமேரூர் நரசிம்மநகரில் குடியிருக்கும் யுவராஜிக்கு கடந்த 24.5.2020-ல் குலதெய்வ கோயிலான காரணிமண்டபம் தண்டரை பச்சயம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொடுத்தோம். சிறிது காலம் மாமியார் வீட்டில் இருந்துவிட்டு மகளும் மருமகனும் வண்டலூரில் உள்ள வீட்டில் குடியிருந்தனர்.

செந்தாரகை
செந்தாரகை

ஊரடங்கு என்பதால் 15 நாள்களுக்கு முன், வீட்டுக்கு வந்தாள் செந்தாரகை. அன்று முதல் அவள் எங்கள் வீட்டில் இருந்து வந்தார். 8.7.2020-ம் தேதி மதியம் 1 மணியளவில் குளிக்கச் சென்றாள். நானும் என் இளைய மகளும் சமைத்துக்கொண்டு இருந்தோம். அப்போது என் கணவர், தான் குளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவள் எவ்வளவு நேரமாகக் குளிக்கிறாள். அவளைக் கூப்பிடும்படி என்னிடம் கூறினார். பொதுவாக, என் மகள் கால்மணி நேரமாவது குளிப்பாள்.

அதனால் வெளியிலிருந்து நான் என் மகளைக் கூப்பிட்டேன். குளியலறையிலிருந்த செந்தாரகை பதிலளிக்கவில்லை. அதனால் வெளிப்பக்கமாகச் சென்று ஜன்னலை திறந்து பார்த்தேன். அப்போது குளியலறையில் என் மகள் கீழே விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான், அந்தத் தகவலை என் கணவரிடம் கூறினேன். உள்பக்கமாகக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அனைவரும் சேர்ந்து கதவை வேகமாகத் தள்ளினோம். அப்போது பூட்டு உடைந்து கதவு திறந்தது.

தற்கொலை
தற்கொலை
Representational Image

குளியலறையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த என் மகளின் தலைந்த் தூக்கிப் பார்த்தேன். தாடையில் தட்டினேன். அவரும் நானும் கைவைத்து அழுத்தினோம். செயற்கையாக வாயில் வாய் வைத்து மூச்சு கொடுத்தோம். ஆனால், எந்தவித அசைவும் இல்லாததால் என் மகள் இறந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்டோம். என் மகளின் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், என் மகந்த் திருமணம் செய்து கொடுத்த இடத்திலும் எந்தவித துன்புறுத்தலும் இல்லை. எனவே, எனது மகளின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீஸ் எஸ்.ஐ மாடசாமி 174 (3) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ``செந்தாரகை மரணத்தில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. குளியலறையில் வழுக்கி விழுந்திருந்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால், செந்தாரகை உடலில் காயங்கள் தெரியவில்லை. அதனால் அவர் எப்படி இறந்தார் என்பதை பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தப்பிறகுதான் சொல்ல முடியும். செந்தாரகையின் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்" என்றனர்.

எப்ஐஆர்
எப்ஐஆர்
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

இதற்கிடையில் செந்தாரகையின் மரணம் குறித்த தகவல் காவல்துறையினருக்கு காலதாமதமாகவே தெரியவந்துள்ளது. அதுவும் செந்தாரகை மரணத்தில் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செந்தாரகை மரணம் தொடர்பாக அவரின் குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 45 நாள்களுக்குள் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் உத்திரமேரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு