Published:Updated:

`கணவர் வீட்டுக்குப் போகச் சொன்னேன்; கேக்கல!’- நெல்லை அருகே அண்ணனால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு வந்திருந்த தங்கையை மீண்டும் கணவன் வீட்டுக்குச் செல்லுமாறு அண்ணன் வற்புறுத்தினார். அதை ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார். 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரின் மகள் ராமலட்சுமி. 29 வயது நிரம்பிய ராமலட்சுமிக்கு செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

`பூனை, அணிலை சித்ரவதை செய்து டிக் டாக் வீடியோ' - விபரீத இளைஞரை வளைத்த நெல்லை போலீஸ்

மாரியப்பன்-ராமலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ராமலட்சுமிக்குச் சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக மாரியப்பன் சந்தேகப்பட்டார். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவன் மீதுள்ள கோபத்தின் காரணமாக ராமலட்சுமி தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். கடந்த இரு வாரங்களாகத் தாய் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில், அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சகோதரர் நயினார், தாய் பேச்சியம்மாள் ஆகியோர் ஈடுபட்டனர். ஆனால் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ ராமலட்சுமி மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

image
image

இந்த நிலையில், தாய் பேச்சியம்மாள் தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது சகோதரர் நயினார், தங்கையிடம் கணவரது வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நயினார், தன் தங்கையை அடித்து உதைத்ததுடன் கழுத்தை நெறித்துள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

தங்கை இறந்ததால் அச்சமடைந்த நயினார், இது பற்றி தன் உறவினரான அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ராமலட்சுமியின் உடலைக் கட்டி தொங்கவிட்டு, அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார்கள்.

``தம்பியின் மரணத்துக்கு பழிக்குப்பழி; மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை" - சென்னையில் நடந்த கொடூரம்

உறவினர் வீட்டிலிருந்து திரும்பிய தாய் பேச்சியம்மாள் இது பற்றி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வந்து பார்த்தபோது ராமலட்சுமியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. அதனால் அவரது தற்கொலையை, சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ராமலட்சுமியின் அண்ணன் நயினாரிடம் போலீஸார் வழக்கமான பாணியில் விசாரித்தபோது தங்கையை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். `கணவரின் வீட்டுக்குச் சென்று வாழுமாறு வற்புறுத்தியதைக் கேட்க மறுத்ததால் அடித்துக் கொன்று விட்டேன்’ என போலீஸாரிடம் தெரிவித்தார். 

தங்கையைக் கொலை செய்ததை நயினார் ஒப்புக் கொண்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை கைது செய்தோம்.
கங்கைகொண்டான் போலீஸார்

அதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய கங்கைகொண்டான் போலீஸார், நயினார் மற்றும் அவருக்கு உதவிய மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தங்கையை அண்ணனே கொலை செய்து விட்டு தற்கொலை நாடகத்தை அரங்கேற்றிய சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு