Published:Updated:

`மகனுக்காக ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டார்!’ - ஷாருக் கானை மறைமுகமாகச் சாடிய கங்கனா?!

மகன் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியது தொடர்பாக ஷாருக் கான் மன்னிப்புக் கேட்காததை நடிகை கங்கனா ரணாவத் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வாரம் சொகுசுக் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் ஷாருக் கானுக்கு ஆதரவும் ஆறுதலும் தெரிவித்திருந்தனர். ஆனால் நடிகை கங்கனா ரணாவத் மட்டும் இந்த விவகாரத்தில் வித்தியாசமாக ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தியில், `நடிகர் ஜாக்கி சானின் மகன் 2014-ம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டபோது ஜாக்கி சான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதோடு, தன் மகனின் செய்லுக்காக வெட்கப்படுவதாகவும், தன் மகனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியிருந்ததோடு, ஜாக்கி சான் மகன் ஆறு மாதம் சிறையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

கங்கனா மறைமுகமாக நடிகர் ஷாருக் கானைத்தான் விமர்சனம் செய்திருக்கிறார் என்கின்றனர். ஷாருக் கான் தன்னுடைய மகன் போதைப்பொருள் பயன்படுத்திக் கைதுசெய்யப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்று மறைமுகமாக கங்கனா சாடியிருக்கிறாராம். ஏற்கெனவே நடிகர் ஹிர்த்திக் ரோஷன், ஷாருக் கான் மகனுக்கு ஆதரவு தெரிவித்ததை கங்கனா கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ``ஆர்யன் கானை பாதுகாக்க அனைத்து மாஃபியா-க்களும் வருகின்றனர். நாம் தவறுகள் செய்யலாம். ஆனால் அதை நியாயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

ஷாருக்கான் மகனின் ஜாமீன் நிராகரிப்பு - ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு; வீட்டு உணவுக்கு அனுமதி மறுப்பு

ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் ஜாமீன் கோரி ஆர்யன் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சொகுசுக் கப்பல் போதை பார்ட்டி தொடர்பாக இது வரை 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஆப்பிரிக்க பிரஜை ஒருவரும் அடங்குவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு