Published:Updated:

`ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதங்களில் ரூ.50 ஆயிரம் தருவோம்' - குமரி போலீஸில் சிக்கிய மதுரைப் புள்ளி!

போலீஸ் விசாரணை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டியன், தன்னை தி.மு.க பிரமுகர் எனக் கூறிக்கொண்டு வலம்வருவதாகவும், அவர் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதங்களில் 5 மடங்காக மாற்றி 50 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

`ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதங்களில் ரூ.50 ஆயிரம் தருவோம்' - குமரி போலீஸில் சிக்கிய மதுரைப் புள்ளி!

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டியன், தன்னை தி.மு.க பிரமுகர் எனக் கூறிக்கொண்டு வலம்வருவதாகவும், அவர் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதங்களில் 5 மடங்காக மாற்றி 50 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

Published:Updated:
போலீஸ் விசாரணை

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு குண்டல் பகுதியிலுள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் ஆறு பேர்கொண்ட கும்பல் ஆளும் தி.மு.க கட்சிக்கொடி கட்டிய காரில் வந்திறங்கியது. அந்த விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த அந்த ஆறு பேரையும் பார்க்கப் பலரும் வந்து சென்றுள்ளனர். இதனால் அந்தத் தங்கும் விடுதி பரபரப்பாகக் காணப்பட்டிருக்கிறது. மேலும் விலையுயர்ந்த கார்கள் அங்கு வந்து செல்வதும், காரில் வந்தவர்கள் பரபரப்பாக எதையோ எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்வதுமாக இருந்தனர். எனவே, அங்கு சட்டத்துக்குப் புறம்பாக ஏதோ நடப்பதாகச் சந்தேகித்த அந்தப் பகுதி மக்கள் கன்னியாகுமரி போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தத் தங்கும் விடுதிக்கு கன்னியாகுமரி போலீஸார் சென்றனர். அப்போது பலர் அந்த விடுதியிலிருந்து எஸ்கேப் ஆனார்கள். விடுதி ஜன்னல் வழியாக ஒரு பேக் வெளியே வீசப்பட்டது. அந்த பேக்கை தேடிக் கண்டுபிடித்த போலீஸார் அறையில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

புதரில் மீட்கப்பட்ட பேக்
புதரில் மீட்கப்பட்ட பேக்

அறையில் நடத்திய சோதனையில் பணம் பெறும்போது வழங்கப்படும் ஆவணங்களும், பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் மற்றும் ரொக்கப் பணமாக சுமார் பத்து லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பணப் பரிமாற்றம் குறித்து போலீஸார் விசாரித்தபோது, மதுரை மாவட்டம், திருமங்கலம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் தன்னை தி.மு.க பிரமுகர் எனக் கூறிக்கொண்டு வலம்வருவதாகவும், அவர் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மூன்று மாதங்களில் ஐந்து மடங்காக மாற்றி 50 ஆயிரம் ரூபாயாகத் திருப்பிக் கொடுப்பதாகவும் சில புரோக்கர்களிடமும் கூறியிருக்கிறார்.

மதுரை புள்ளி வந்த தி.மு.க கொடிகட்டிய கார்
மதுரை புள்ளி வந்த தி.மு.க கொடிகட்டிய கார்

புரோக்கர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் பலமடங்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் பணத்தை அங்கு சென்று செலுத்தியது தெரியவந்திருக்கிறது. தி.மு.க பிரமுகர் எனக் கூறும் சுந்தர பாண்டியனையும், அவருடன் வந்த ஆறு பேரையும் பிடித்து கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.