Published:Updated:

`கன்னியாகுமரியிலும் கலெக்டர் பெயரில் இ-மெயில் மோசடி!’ தனிப்படை விசாரணை

கன்னியாகுமரி எஸ்.பி.பத்ரி நாராயணன்
கன்னியாகுமரி எஸ்.பி.பத்ரி நாராயணன்

`கடந்த 3 மாதங்களில் கனிமவள கொள்ளையில் ஈடுபட்ட 93 பேர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன’ என்றார் குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் பொதுமக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய வசதியாக வாட்ஸ் அப் எண்ணை இன்று வெளியிட்டார்.

பின்னர் எஸ்.பி பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் குற்ற சம்பவங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் வகையில் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார்களைத் தெரியப்படுத்த 7010363173 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாகத் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பெயரில் இ-மெயில் முகவரி தொடங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து தனி டீம் ஏற்படுத்தி விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை நடந்துகொண்டிருப்பதால், கலெக்டர் பெயரில் போலி இ மெயில் கிரியேட் செய்தவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் விபரம் உள்ளிட்டவைகளை இப்போது வெளியிட முடியாது.

கன்னியாகுமரி எஸ்.பி.பத்ரி நாராயணன்
கன்னியாகுமரி எஸ்.பி.பத்ரி நாராயணன்

பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 15 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் 25 வயதுக்குள்ளான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்கு பிற மாவட்ட மற்றும் பிற மாநில தனி டீம்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்டம் ஒழுங்கு, திருட்டு, பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 20 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

`என் பெயர்லயே போலி மெயில் அனுப்பிட்டாங்க!’ - மோசடி முயற்சியால் கொதித்த நீலகிரி கலெக்டர்

குற்றவாளிகள், சந்தேக நபர்கள், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவர்கள் என 590 குற்றவாளிகள் மீது நன்னடத்தை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 நபர்களுக்கு நன்னடத்தை பிணை வழங்கப்பட்டு, அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிணையை மீறி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பிணைக்காலம் முடியும் வரை சிறையில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்
குமரி எஸ்.பி பத்ரி நாராயணன்

கடந்த மூன்று மாதங்களில் 31 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 71 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 64 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்ட 93 பேர் மீது 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் 32 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

சமீபத்தில், தனது பெயரில் இ-மெயில் ஐ.டி தொடங்கப்பட்டு, மாவட்ட அதிகாரிகளிடம் மோசடி நடத்த முயன்ற கும்பல் தொடர்பாக நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்யா போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு