Published:Updated:

`என்னை எதுக்காக சார் காப்பாத்தினீங்க?' - குடிமகனின் டார்ச்சரால் திணறும் காரைக்கால் இன்ஸ்பெக்டர்

தற்கொலை
தற்கொலை

பணம் தராவிட்டால் தென்னைமரம், பனை மரம், மின் கம்பம், கோயில் காம்பவுண்டு என ஏதாவது ஒன்றில் ஏறி சவுண்டு விடுவதும் இதைப் பார்ப்பவர்கள் இறக்கி விடுவதும் அவர் மீது பரிதாபப்பட்டு பணம் தருவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து கீழே விழுந்து உயிர்பிழைத்த போதை வாலிபரின் வீடியோ காரைக்கால் மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் மகத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் (வயது 40). குடிப்பழக்கம் உடையவர். குடிக்கப் பணம் இல்லாவிட்டால் போகிற, வருகிறவர்களை எல்லாம் மிரட்டிப் பணம் கேட்பதை வழக்கமாகக் கொண்டவர் இவர் என்கிறார்கள். பணம் தராவிட்டால் தென்னைமரம், பனை மரம், மின் கம்பம், கோயில் காம்பவுண்டு என ஏதாவது ஒன்றில் ஏறி சவுண்டு விடுவதும் இதைப் பார்ப்பவர்கள் இறக்கி விடுவதும் அவர் மீது பரிதாபப்பட்டு பணம் தருவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

கணவனைக் கொன்ற மனைவி... மனைவியைக் கொன்ற கணவன்... போலீஸை தாக்கிய இளைஞர்!- `குடி'யால் திணறும் கோவை

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இதேபோல் மகத்தோப்பு சாராயக்கடை அருகிலுள்ள மின்கம்பத்தில் டேவிட் ஏறி மிரட்டல் விடுத்திருக்கிறார். அப்போது கரண்ட் கம்பியைப் பிடிக்க முயல, வழக்கம்போல் பொதுமக்கள் மற்றும் போலீஸ் அவரைக் காப்பாற்றி இறக்கிவிட முயன்றனர். எதிர்பாராத விதமாகக் கைநழுவி கீழே விழுந்த அவரை திருப்பட்டினம் இன்ஸ்பெக்டர் தனசேகர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

hospital
hospital

இதுபற்றி திருபட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரிடம் பேசினோம். "அவன் மின் கம்பியைப் பிடித்து உயிரிழந்து விடுவானே... பாவம் என்று கருதி அப்பகுதியில் மின்சாரத்தை கட் பண்ண செய்தோம். அதற்குள் அவன் கைநழுவி கீழே விழுந்துவிட்டான். உடனடியாக் ஆம்புலன்ஸை வரவழைத்து காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்து தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.

குணமடைந்து வந்தவன் இப்போது போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு டார்ச்சர் செய்கிறான். 'குடிக்க பணம் கெடக்கலைன்னு சாகப்போன என்னை ஏன் காப்பாத்துனீங்க? அப்ப நீங்க பணம் கொடுங்க. இல்லேன்னா போலீஸ் ஸ்டேஷன் மீது ஏறி தலைகீழா குதித்து செத்துடுவேன்னு மிரட்டுறான். அவனை என்ன பண்றதுன்னே தெரியலை" என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு