Published:Updated:

காரைக்கால்: `தாயின் இரண்டாவது கணவர் கொலை; 25 ஆண்டுகள் தலைமறைவு!’ - போலீஸில் சிக்கிய நபர்

கைது
கைது

`அடைக்கலதாஸுக்கு தற்போது 59 வயதாகிறது. தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொன்றவர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு 59 வயது முதியவராகக் கைது செய்யப்பட்டுள்ளார்.’

தாயின் 2 - வது கணவரைக் கொலை செய்தவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் நடந்திருக்கிறது.

அடைக்கலதாஸ்
அடைக்கலதாஸ்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருேகேயுள்ள சுப்பராயபுரம் கிராமத்தைச் சேர்ந்ததவர் சம்னுஸ்மேரி. இவருடைய கணவர் சாமிக்கண்ணு. இவர்களின் ஒரே மகன் அடைக்கலதாஸ். இளம் வயதிலேயே சாமிக்கண்ணு இறந்துவிட்டதால், ராஜமாணிக்கம் என்பவரை சம்னுஸ்மேரி இரண்டாவதாகத்  திருமணம் செய்துகொண்டார். ஆனால், ராஜமாணிக்கத்துக்கும், சம்னுஸ்மேரியின் மகன் அடைக்கலதாஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ராஜமாணிக்கத்தைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அடைக்கலதாஸ், அவர் உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலைபோல் செட்டப் செய்திருக்கிறார். இது நடந்தது 1990-ம் வருடம். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருநள்ளாறு காவல் நிலைய போலீஸார், அடைக்கலதாஸையும், கொலைக்கு உடந்தையாக இருந்த சம்னுஸ்மேரியையும் கைது செய்தனர். இந்த வழக்கு காரைக்கால் கோர்ட்டில் நடந்துவந்தது. .

சென்னை: தம்பிக்காக அண்ணன் போட்ட சபதம்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் கொலை!

கடந்த1994 -ம் ஆண்டு இந்தக்  கொலை வழக்கிலிருந்து சம்னுஸ்மேரி விடுதலை செய்யப்பட்டார். அடைக்கலதாஸ் மீதான வழக்கு மட்டும் நடந்து வந்தது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அடைக்கலதாஸ் தலைமறைவானார். இதனால் அவரைத்  தேடப்படும் குற்றவாளியாக காரைக்கால் கோர்ட் கடந்த 1995 -ம் ஆண்டு அறிவித்தது. பல இடங்களில் போலீஸார் தேடியும் அடைக்கலதாஸ் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது காரைக்கால் மாவட்ட புதிய சீனியர் போலீஸ் சூப்பரின்டெண்டென்ட்-ஆகப் பதவியேற்ற  நிஹாக்கா பட், `தேடப்படும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் "என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும்  உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து  காரைக்கால் மாவட்ட எஸ்.பி பிரவீன்குமார் தலைமையிலான சிறப்புப் பணி போலீஸார் அடைக்கலதாஸைத் தீவிரமாகத் தேடினா்.

அடைக்கலதாஸ்
அடைக்கலதாஸ்

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கடம்பகுடிப் பகுதியில் அடைக்கலதாஸ் இருப்பது இந்தத் தனிப்படை போலீஸாருக்குத் தெரியவந்தது. இதைத்  தொடர்ந்து நேற்று முன்தினம் ரகசியமாக கடம்பகுடிப் பகுதியிலிருந்த அவரை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட அடைக்கலதாஸுக்கு  தற்போது 59 வயதாகிறது. தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொன்றவர் 25 ஆண்டுகளுக்குப்பின் 59 வயது முதியவராகக் கைது  செய்யப்பட்டுள்ள சம்பவம் காரைக்கால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு