Published:Updated:

காரைக்கால்: இலவச அரிசி மூட்டைகளை பதுக்கிய தலைமையாசிரியர் - விசாரணை நடத்தும் அதிகாரிகள்

தலைமையாசிரியர்

காரைக்காலில் அரசுப் பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் ஏழைகளுக்கு வழங்கக்கூடிய அரிசி மூட்டைகளை அப்பள்ளி தலைமையாசிரியர் திருடியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால்: இலவச அரிசி மூட்டைகளை பதுக்கிய தலைமையாசிரியர் - விசாரணை நடத்தும் அதிகாரிகள்

காரைக்காலில் அரசுப் பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் ஏழைகளுக்கு வழங்கக்கூடிய அரிசி மூட்டைகளை அப்பள்ளி தலைமையாசிரியர் திருடியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தலைமையாசிரியர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நேரு நகர் பகுதியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. ரேஷன் கடைகள் பூட்டிக் கிடப்பதால் இங்கு மத்திய அரசால் சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி 100 மூட்டை பள்ளி கட்டட வகுப்பில் வைக்கப்பட்டுள்ளது

தலைமையாசிரியர்
தலைமையாசிரியர்

பள்ளி விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளிக் கட்டடத்திலிருந்து அரிசி மூட்டைகள் சரக்கு வண்டியில் ஏற்றப்படுவதாக புகைப்பட ஆதாரத்துடன் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநரை அழைத்து வந்து பள்ளியிலுள்ள அரிசி மூட்டைகளை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த வகுப்பறை பூட்டப்பட்டிருந்ததால் அங்கு பணிபுரியும் தலைமையாசிரியர் விஜயகுமாரை பள்ளிக்கு உடனே வர அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலை முதல் மதியம் வரை 'இதோ வருகிறேன் அதோ வருகிறேன்’ என்று காலம் தாழ்த்தி வராமல் போக்கு காட்டியுள்ளார். தலைமையாசிரியருக்காக ஐந்து மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த அதிகாரிகள் வேறுவழியின்றி சீல் வைக்கப்பட்ட வகுப்பறை பூட்டை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு மூட்டை 50 கிலோ விதமாக, 100 மூட்டை வைக்கப்பட்டிருந்த இடத்தில் 88 மூட்டைகள் மட்டுமே இருந்தது. 12 அரிசி மூட்டை காணாமல் போனது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கடிதம்
கடிதம்

பின்னர் அதிகாரிகள் விசாரணையில் தலைமையாசிரியர் விஜயகுமார் திருட்டில் ஈடுபட்டு அம்பலமானது. மேலும் அதிகாரிகள் அவர் மீது துறைரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமையாசிரியரே அரிசி மூட்டைகள் திருடியது காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism