Published:Updated:

மொட்டை மாடியில் கிடந்த சடலம்; சந்தேக வளையத்தில் மனைவி; சகோதரி! - காரைக்குடியைப் பதறவைத்த கொலை

அதிகாலையில் வீட்டின் மொட்ட மாடியில் நடந்த கொலை சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல்நிலையம் விசாரணை நடத்திவருகிறது.

மொட்ட மாடியில் நடந்த கொலை
மொட்ட மாடியில் நடந்த கொலை ( சாய்தர்மராஜ் )

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து. இவரின் மனைவி பூமதியுடன் காரைக்குடி பெரியார் நகரில் வசித்துவருகிறார்.

மணிமுத்து
மணிமுத்து
சாய்தர்மராஜ்

இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிமுத்து கத்தார் நாட்டில் வெல்டராகப் பணி செய்துவருகிறார். தொடர்ந்து பலவருடமாக வெளிநாடுகளில் பல்வேறு வேலைகள் செய்துவந்தார். இந்நிலையில் 15 நாள்களுக்கு முன் மணிமுத்து ஊருக்கு வந்திருந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாடியில் தூங்கிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இரவு தூங்கச் சென்றவர் காலை நீண்ட நேரமாகியும் எழுந்துவரவில்லை எனக் கூறப்படுகிறது. அவரைச் சென்று பார்க்கையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அதிகாலை 4 மணி அளவில் இந்தக் கொலை நடந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. மணிமுத்துவின் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு, வயிறு மற்றும் கழுத்தில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மணிமுத்து அதிகாலை நேரம் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தாக அவரின் மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மணிமுத்துவின் வீடு
மணிமுத்துவின் வீடு

ஆனால், அவர் பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட எந்தவிதமான பொருளும் அங்கு இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் மணிமுத்துவின் மனைவி பூமதியிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், மணிமுத்துவுக்கும் அவரின் சகோதரிக்கும் சொத்து தகராறு இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மணிமுத்துவை அவரது நெருங்கிய உறவுகள்தாம் கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துவருகிறது. கொலைக்கு கள்ளத்தொடர்பு அல்லது சொத்துத் தகராறாக இருக்க வேண்டும் என்று யூகித்த போலீஸ் மேலும் சில கோணங்களில் மணிமுத்து கொலையில் விசாரணை செய்துவருகிறது.

மணிமுத்து கொலை செய்யப்பட்ட மொட்டைமாடி
மணிமுத்து கொலை செய்யப்பட்ட மொட்டைமாடி

இதற்கிடையே, மணிமுத்துவின் மனைவிக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரையும் விசாரணை வளையத்துக்குள் போலீஸ் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.