Published:Updated:

`சொகுசு கார்னா சந்தேகம் வராது!’ - போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு
போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

அழகப்பன் ஹோண்டா சிட்டி காரில் தொடர்ந்து ஆடுகளைத் திருடிக்கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். ஏற்கெனவே, இவர் மீது புதுக்கோட்டை, திருச்சி ஆகிய காவல் நிலையங்களில் ஆடு திருட்டு குறித்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே ஆடு திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆடுகள் திருடு போகும் சம்பவங்கள் தொடர்கதையாகவே, ஆடுகளை இழந்தவர்கள் பலரும் கறம்பக்குடிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆடு திருட்டு குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகமாகவே இதுபற்றி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். சில இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், கறம்பக்குடி வழியாகச் சந்தேகப்படும்படியாக வந்த ஹோண்டா சிட்டி வாகனத்தைப் பரிசோதனை செய்தபோது, காருக்குள் ஆடு இருப்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரிடம், போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், ஆட்டைத் திருடிக்கொண்டுவந்ததை ஒப்புக்கொண்டார். ஆடு திருட்டில் ஈடுபட்டது கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த அழகப்பன்(48) என்பது தெரியவந்தது.

போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு
போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

இவர், தனது ஹோண்டா சிட்டி காரில் தொடர்ந்து ஆடுகளைத் திருடிக்கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். ஏற்கெனவே, இவர் மீது புதுக்கோட்டை, திருச்சி ஆகிய காவல் நிலையங்களில் ஆடு திருட்டு குறித்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான், தற்போது அழகப்பனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹோண்டா சிட்டி காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது, "அழகப்பன் கடந்த முறைகளைக் காட்டிலும் தற்போது தெளிவாகத் திட்டமிட்டு காரில் வைத்து ஆடுகளைக் கடத்தியுள்ளார். குறிப்பாக, கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் மட்டும் ஏராளமான ஆடுகளை இவர் திருடி விற்பனை செய்துள்ளார். சொகுசு கார் என்பதால், யாருக்கும் சந்தேகம் வராது என்ற அடிப்படையில்தான் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு உடந்தையாகச் சிலர் இருந்துள்ளனர். அவர்களையும் தேடி வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு