Published:Updated:

கர்நாடகா: நீண்ட நாள்கள் நிலுவையில் போடப்பட்ட `பில்'; தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரர்?

தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரர் டி.என்.பிரசாத்

கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் ஒருவர், அரசு நீண்ட நாள்களாக தன்னுடைய பில்-ஐ(Bill) நிலுவையில் போட்டதால் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஏப்ரலில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கமிஷன் கேட்ட நிலையில், அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் போலீஸார் விசாரணையில் கைப்பற்றப்பட்ட சந்தோஷ் பாட்டீல் போனில், `தற்கொலைக்கு முழுக்காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான்' என்ற செய்தி கிடைத்தது. இந்த விவகாரம் பெரிதாக இறுதியில் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலக நேர்ந்தது.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில் இதேபோன்று தும்குரு மாவட்டத்தில் தேவராயனதுர்கா விருந்தினர் மாளிகையில் அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி டி.என்.பிரசாத் என்றறியப்படும் அரசு ஒப்பந்ததாரர், அரசிடம் நீண்ட நாள்களாக `பில்(Bill)' நிலுவையிலிருந்ததால் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 16 கோடி மதிப்பிலான அரசு திட்டத்தை முடிக்க பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரர் டி.என்.பிரசாத்
தற்கொலை செய்துகொண்ட அரசு ஒப்பந்ததாரர் டி.என்.பிரசாத்

இதில் தன்னுடைய மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்று பிரசாத் தற்கொலை கடிதம் எழுதியிருப்பதாகக் கூறிய தும்குரு போலீஸ் அதிகாரி, இதனை தன்னுடைய நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் பிரசாத் நண்பர் ஒருவர், ``தான் வாங்கிய கடன்களால் அவர் இறந்துவிட்டாதாக நினைக்கிறேன். அந்தத் துறையில் பொறுப்பின்மை அதிகளவில் இருக்கிறது. எந்த அளவுக்கு எனில், ஒருவர் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறினாலும் அவர்களுக்கு நிலுவைத்தொகை தான் தேவை. அந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறது. எனவே கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்" என்றார். பிரசாத்தின் இன்னொரு நண்பர், பிரசாத் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய புதிய வீட்டை கடன் தொல்லையால் விற்றுவிட்டதாகக் கூறினார்.