Published:Updated:

``கிறிஸ்தவத்துக்கு மதம் மாற அழுத்தம் கொடுக்கிறார்!" - மனைவி மீது போலீஸில் புகாரளித்த நபர்

போலீஸ்

மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்வதாக கணவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

``கிறிஸ்தவத்துக்கு மதம் மாற அழுத்தம் கொடுக்கிறார்!" - மனைவி மீது போலீஸில் புகாரளித்த நபர்

மனைவி தன்னை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்வதாக கணவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
போலீஸ்

கட்டாய மதமாற்ற தடைச் சட்டதை அமல்படுத்தவேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இதில் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் குரல்வாக்கெடுப்பு மூலம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த வரிசையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மேலவையில் மதமாற்ற தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவின் ஹுப்பள்ளி நகரில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யமுயன்றது தொடர்பாக 15 பேர்மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. அதுவும், கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விவகாரம் தற்போது வெளிவந்திருக்கிறது.

கணவன் - மனைவி இடையே பிரச்னை
கணவன் - மனைவி இடையே பிரச்னை
சித்திரிப்புப் படம்

அதாவது, ஹுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை அவரின் மனைவி கிறிஸ்தவ மதத்துக்கு மாற வற்புறுத்தியதாகவும், அவருடன் வாழ மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் மதபோதகர் தன்னுடைய மாமியார் வீட்டுக்குவந்து பிரார்த்தனையில் கலந்துகொள்ளுமாறு வற்புத்தியதாகவும், அந்த இளைஞர் கூறியிருக்கிறார். இதனால் பெரும் அழுத்தத்துக்குள்ளான அவர், அந்தப் பகுதி சமூகத் தலைவர்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

பின்னர் இந்த விவகாரத்தில், மதபோதகர்கள் உட்பட மொத்தம் 15 பேர் மீது போலீஸில், சமூகத் தலைவர்கள் புகாரளித்திருக்கின்றனர். இருப்பினும், இது சம்பந்தமாக புகார்தாரர்கள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைக்கு வராததன் காரணமாக, மதபோதகர்கள் உட்பட அந்த 15 பேர் மீது இன்னும் வழக்கு பதிவுசெய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.