Published:Updated:

`சித்ரவதை செய்ய வேண்டாம்' என்று கெஞ்சினேன்! - கணவரால் சினிமா பாடகி எடுத்த விபரீத முடிவு

சுஷ்மிதா
சுஷ்மிதா ( twitter )

தனது குடும்பத்தினர் மூலம் சுஷ்மிதாவைப் பெண் கேட்டுச் சென்றுள்ளார் சரத்குமார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருவீட்டாருக்கும் இடையே சம்மதம் ஏற்பட அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக சினிமா துறையில் பிரபல பாடகியாக இருப்பவர் 26 வயதான சுஷ்மிதா. இவருக்கும் சரத்குமார் என்பவருக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் சுஷ்மிதா ஞாயிற்றுக்கிழமை தன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல இரவில் உணவருந்திவிட்டு அறைக்குத் தூங்கச் சென்றவர் திங்கள்கிழமை காலை தூக்கில் தொங்கியவாறு பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரின் பெற்றோர் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சுஷ்மிதா
சுஷ்மிதா
twitter

சினிமாவில் பாடகராக வருவதற்கு முன் ஆர்க்கெஸ்ட்ராக்களில் பங்கேற்று பாடி வந்துள்ளார். ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றில் சரத்குமார் என்பவர் சுஷ்மிதாவைப் பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் பிடித்துப்போக தனது குடும்பத்தினர் மூலம் சுஷ்மிதாவைப் பெண் கேட்டுச் சென்றுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இருவீட்டாருக்கும் இடையே சம்மதம் ஏற்பட அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு, தன் சகோதரர் சச்சின் வீட்டின் அருகிலேயே சரத்தும் சுஷ்மிதாவும் வாழ்ந்துவந்துள்ளனர். முதலில் நன்றாகச் சென்ற அவர்களது வாழ்க்கை சிறிது காலத்துக்குப் பின் மாறியுள்ளது.

தடுப்பூசி போட்ட 5 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! - சர்ச்சையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை

சுஷ்மிதா குடும்பத்தாரிடம் வரதட்சணைக் கேட்டு சரத்குமார் தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒருகட்டத்தில் சரத் வீட்டாரின் நடவடிக்கைகள் மொத்தமாக மாறியுள்ளன. சரத், அவரின் தாய் மற்றும் சரத்தின் சகோதரி ஆகியோர் அவரை டார்ச்சர் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துதான் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சுஷ்மிதா தற்கொலை செய்துகொள்வதற்குமுன் இரவு 1 மணி அளவில் வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்றை தன் தாய்க்கும் சகோதரன் சச்சினுக்கும் அனுப்பியுள்ளார்.

சுஷ்மிதா
சுஷ்மிதா
twitter

அதில், தான் அனுபவித்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ``அம்மா, தயவுசெய்து என்னை மன்னியுங்கள். சரத், அவரின் தாயார் கீதாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை சித்ரவதை செய்துவந்தார். எனது சொந்தத் தவறுக்காக நான் கஷ்டப்பட்டேன். இதைப் பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. என் கணவர் என்னை ஒரு வார்த்தைகூட பேச அனுமதிக்கவில்லை.

சரத் எப்போதும் கூச்சலிட்டுக்கொண்டு என்னை வீட்டைவிட்டு வெளியேற சொல்லிக்கொண்டே இருந்தார். நான் ஒரு வார்த்தை பேசினால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்வார்கள். சரத் மிகவும் பிடிவாதமாக இருந்தார். ஒருபோதும் நான் சொல்வதை அவர் கேட்டதில்லை. என்னை சித்ரவதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன். நான் எவ்வளவோ கேட்டுக்கொண்டேன்.

`கஞ்சா விக்கிற இடத்துல நீ  யாருடா?' -கடலூர் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ரௌடியால் நேர்ந்த விபரீதம்

ஆனால், அதைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படவில்லை. தற்கொலையைக்கூட அவர்கள் வீட்டில் நான் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இங்கு வந்தேன். என் மரணத்துக்கு அவர்கள் மூவரும்தான் காரணம். சரத்தை அப்படியே விட்டுவிடாதீர்கள். என் கணவர் உட்பட அவர்கள் தண்டிக்கப்படாவிட்டால், என் ஆன்மா ஓய்வெடுக்காது. என்னை இப்படித் தற்கொலை செய்ய வைத்ததற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அம்மா நான் உன்னை ரொம்ப மிஸ் செய்வேன். என்னை நினைத்து வருந்தாதே. தம்பி சச்சினை நன்றாகக் கவனித்துக்கொள். தயவுசெய்து என் உடலை பூர்வீக வீட்டில் தகனம் செய்யுங்கள். தம்பி சச்சினை இறுதிச் சடங்குகளை நடத்த விடுங்கள் அம்மா" என்று அனுப்பியுள்ளார்.

சுஷ்மிதா
சுஷ்மிதா
twitter

இந்த மெசேஜை மறுநாள் காலை 5.30 மணி அளவில் பார்த்துள்ளார் சச்சின். இதனால் பதறியவர் உடனடியாக சுஷ்மிதாவின் ரூமுக்குச் சென்றுள்ளார். ஆனால், அதற்குள் சுஷ்மிதா உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் வாட்ஸ்அப் மெசேஜை வைத்து இப்போது போலீஸார் வரதட்சணைக் கொடுமை பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சரத் மாயமாகிவிட்டதால் இப்போது அவரைத் தேடும் பணியை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். சுஷ்மிதாவின் தற்கொலை சம்பவம் கர்நாடகத் திரையுலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

`உனக்கு மட்டும் குழந்தை இருக்கு!’ - தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் நடந்த விபரீதம்
அடுத்த கட்டுரைக்கு