Published:Updated:

புதையலுக்கு ஸ்கெட்ச் போட்டனர்; வாலிபரைக் கடத்தினர்!- சிக்கிக் கொண்ட பெண் இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள்

ஜெர்லினுக்குப் புதையல் கிடைத்ததாக தகவல் பரவியதும் அவரை மிரட்டி புதையலைப் பறிக்க இருவரும் திட்டமிட்டனர்.

இன்ஸ்பெக்டர் பொன் தேவி
இன்ஸ்பெக்டர் பொன் தேவி

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஜெர்லின்(26). இவர் ரீத்தாபு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ஜே.சி.பி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்குள் அவர் சொந்தமாக ஜே.சி.பி வாங்கியதுடன், வீடு, கார் என வசதியாகியுள்ளார்.

புதையல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுரேஷ்குமார்
புதையல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுரேஷ்குமார்

ஜே.சி.பி.யில் மண் தோண்ட சென்றபோது ஜெர்லினுக்குப் புதையல் கிடைத்ததாகவும் அதனால்தான் அவர் திடீர் பணக்காரர் ஆனதாகவும் தகவல் பரவியது. இந்தத் தகவலை அடிப்படையாகக்கொண்டு அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியர் சுரேஷ் மற்றும் கருங்கல் காவல்நிலைய காவலர்கள் ஜோன்ஸ், ரூபின் ஆகியோர் சிலருடன் சேர்ந்து மான்கறி வாங்கித்தருவதாகக் கூறி ஜெர்லினைக் கடத்தியுள்ளனர். வள்ளியூர் அருகே மனம்பாடு பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் வைத்து ஜெர்லினை மிரட்டி புதையல் குறித்து கேட்டுள்ளனர். அவர் புதையல் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறியதும் அவரது நகைகளைப் பறித்ததுடன், சில பத்திரங்களில் கையொப்பம் வாங்கியுள்ளனர்.

10 மாதமாகத் தேடல்;முருகன் கும்பல் சிக்கியது!-  மொட்டைபோட்டு நேர்த்திக்கடன் செலுத்திய திருச்சி போலீஸ்

அங்கிருந்து தப்பிய ஜெர்லின் குளச்சல் ஏ.எஸ்.பி கார்த்திகேயனிடம் நேரில் சென்று புகார் கூறினார். இதையடுத்து ஏ.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

விசாரணையில் கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன் தேவியின் தூண்டுதலின் பேரில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்குத் தலைமைதாங்கிய சுரேஷ்குமார், ஜெயன்ராபி, கிருஷ்ணகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன் தேவி, காவலர்கள் ஜோன்ஸ், ரூபின் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

`அடம் பிடித்தார், ஆசையாக ஊட்டிவிட்டேன்!' - கணவரைக் கொன்ற `தோசை மாவு' அனுப்பிரியா வாக்குமூலம்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் சுரேஷ்குமாருக்கும் கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன் தேவிக்கும் ஏற்கெனவே நட்பு இருந்துள்ளது. ஜெர்லினுக்குப் புதையல் கிடைத்ததாக தகவல் பரவியதும் அவரை மிரட்டி புதையலைப் பறிக்க இருவரும் திட்டமிட்டனர். இதற்காக ஜெர்லின் மீது போலி முகவரியில் ஒரு புகார் தயார்செய்துள்ளனர். பின்னர் இரண்டு காவலர்கள் மற்றும் சுரேஷ் தலைமையிலான கும்பல் சேர்ந்து ஜெர்லினைக் கடத்தி புதையல் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்காததால் நகைகளைப் பறித்துள்ளனர்.

இன்ஸ்பெக்டர் பொன் தேவி
இன்ஸ்பெக்டர் பொன் தேவி

சுரேஷ்குமாரின் மொபைல் எண்ணை ஆய்வு செய்தபோது இன்ஸ்பெக்டருக்கும் அவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுவரை மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தேடப்பட்டு வருகின்றனர். ஜெர்லின் கார், ஜே.சி.பி. ஆகியவை லோன் மூலம் வாங்கியதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.