Published:Updated:

கரூர்: 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! - 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சரவணனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூரில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு, கரூர் மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது.

சரவணன்
சரவணன்
தோழி வீட்டுக்குச் சென்ற மாணவி மாயம்?! ; தேடிய பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்! -நடந்தது என்ன?

கரூரில் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை, 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பிறகு, அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை, தனது உறவினர்களிடம் கண்ணீரோடு விவரித்தார். அதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமியின் பெற்றோர், சரவணன்மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கைப் பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீஸார், சரவணனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

கரூர்
கரூர்

இந்தநிலையில், இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சரவணனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

16 ஆண்டுகளாக பாலியல் தொல்லை; புகார் அளித்த 23 மாணவிகள்; கும்பகோணம் பள்ளி ஆசிரியர் கைது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு