Published:Updated:

கோவை, சேலம், கரூர் பைபாஸ் என ஓட்டம்! - பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது

கோவையில் மருத்துவர் ரஜினிகாந்த் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில், கரூர் டி.எஸ்.பி தேவராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் கோவை விரைந்தனர். ஆனால், அங்கிருந்து சேலத்துக்கு மருத்துவர் ரஜினிகாந்த் தப்பிச் சென்றார்.

தனது தாய் பணிபுரியும் மருத்துவமனையில், தாயின் சம்பளப் பணத்தை வாங்கச் சென்ற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர், இரண்டு நாள்களுக்குப் பிறகு இன்று கைதுசெய்யப்பட்டார்.

அந்த மருத்துவமனை
அந்த மருத்துவமனை
அம்மாவின் சம்பளப் பணத்தை வாங்கச் சென்ற பள்ளி மாணவி! - பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் தலைமறைவு

கரூர் நகர் பகுதியில் இயங்கிவரும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை மருத்துவர் ரஜினிகாந்த் மீது, மருத்துவமனையில் பணியாற்றும் காசாளர் பெண் அவரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த 13-ம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது, அந்தப் பெண், மருத்துவமனை நிர்வாகத்திடம் முன்பணம் வாங்கியிருந்ததால், அவருக்குக் கடந்த தீபாவளிக்கு போனஸும் சம்பளமும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அந்தப் பெண் மருத்துவமனைக்கு வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த மருத்துவர் ரஜினிகாந்த், அந்தப் பெண்ணின் மகளிடம், 'உன் அம்மாவின் சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போ' என்று அவரின் மேலாளர் சரவணன் மூலமாக போன் மூலமாக அழைத்ததாகச் சொல்கிறார்கள்.

இதை நம்பி மருத்துவமனைக்குச் சென்ற அந்த மாணவியை தனது தனியறைக்கு அழைத்த மருத்துவர் ரஜினிகாந்த், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, கூச்சலிட்டப்படி வெளியே ஓடிவந்திருக்கிறார். அதோடு, மருத்துவரின் அத்துமீறலை தன்னுடைய தாயிடம் கண்ணீரோடு விவரிக்கவே அந்தப் பெண், மருத்துவர்மீது புகார் கொடுத்தார். அதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மருத்துவமனையின் மேலாளர் சரவணனை நேற்று முன்தினம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மருத்துவர் ரஜினிகாந்த்
மருத்துவர் ரஜினிகாந்த்

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்தை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸாரும் மருத்துவர் ரஜினிகாந்தை வலைவீசித் தேடிவந்தனர். கோவையில் மருத்துவர் ரஜினிகாந்த் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில், கரூர் டி.எஸ்.பி தேவராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸார் கோவை விரைந்தனர். ஆனால், அங்கிருந்து சேலத்துக்கு மருத்துவர் ரஜினிகாந்த் தப்பிச் சென்றார். சேலத்தில் மருத்துவர் ரஜினிகாந்த் செல்போன் சிக்னல் கண்டறியப்பட்ட நிலையில், மற்றொரு தனிப்படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான தனிப்படை டீம், ரஜினிகாந்தின் செல்போன் சிக்னலைப் பின்தொடர்ந்தது. பின்னர், சேலத்திலிருந்து கரூர் வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்ற ரஜினிகாந்தின் காரை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். நீதிபதியின் வீட்டில் ரஜினிகாந்த் போலீஸாரால் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாள் நீதிமன்றக் காவலில் கரூர் கிளைச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு