Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `போதையில் இருக்குறே, தகராறு செய்யாதே!' - அறிவுரை சொன்ன தாய்க்கு மகனால் நேர்ந்த துயரம்

கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்
கொலை செய்யப்பட்ட பழனியம்மாள்

மகன் முத்துராஜை அவரின் தாய் பழனியம்மாள் கண்டித்திருக்கிறார். மேலும், `தகராறு வேண்டாம். நீ போதையில இருக்குறே. பேசாம வீட்டுல வந்து படு' என்றும் கூறியதாகத் தெரிகிறது.

'போதையில் இருக்குறே. அடுத்தவங்களோட தகராறு செய்யாதே' என்று அறிவுரை கூறிய தாயை, மகன் கடப்பாரையால் தலையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்துராஜ், பழனியம்மாள்
முத்துராஜ், பழனியம்மாள்
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் மனைவிக்கு பாலியல் டார்ச்சர் - அ.ம.மு.க நிர்வாகி கொடூரக் கொலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை ஒட்டியிருக்கிறது ஜங்கால்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது: 35). இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இவர் வேலைக்குச் செல்லாமல், மதுவைக் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடமும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடமும் அடிக்கடி சண்டை வளர்ப்பது வாடிக்கையாம். இந்தநிலையில், மதுவைக் குடித்துவிட்டு வந்த முத்துராஜ், பக்கத்து வீட்டிலுள்ள சக்திவேல் என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மகன் முத்துராஜை அவரின் தாய் பழனியம்மாள், கண்டித்துள்ளார். மேலும், 'தகராறு வேண்டாம். நீ போதையில் இருக்குறே. பேசாம வீட்டுல வந்து படு' என்றும் கூறியதாகத் தெரிகிறது.

முத்துராஜ்
முத்துராஜ்

இதனால், குடிபோதையில் இருந்த முத்துராஜ் கோபமடைந்து, அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து தாய் பழனியம்மாள் தலையில் பலமாகத் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அரவக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் முத்துராஜாவைக் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், உயிரிழந்த பழனியம்மாளின் உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கடும் குடி போதை காரணமாக பெற்ற தாயையே கடப்பாரையால், இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு