Published:Updated:

`தினமும் இதையே சொல்லி திட்டினார்!' - நண்பரின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி அதிர்ச்சி வாக்குமூலம்

'ஆண் நண்பர் உடனான பழக்கத்தை விட்டுவிடு' என்று அறிவுரை வழங்கிய கணவரை, கல்லூரி மாணவன் மூலமாக டிராக்டரை ஏற்றிக் கொலை செய்துள்ளார் மனைவி.

சித்ரா மற்றும் சுதாகர்
சித்ரா மற்றும் சுதாகர் ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி அருகே இருக்கிறது, முடிகனம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயியான இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரோடு, சித்ராவுக்குத் தவறான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுதாகர் சின்னதாராபுரம் பகுதியில் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இவர்களது தவறான பழக்கத்தை அறிந்த மனோகரன், இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார்.

சித்ரா
சித்ரா
நா.ராஜமுருகன்

சித்ராவைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இதனால், கோபமான சித்ரா, தங்களது உறவுக்குத் தடையாக இருக்கும் கணவரை சுதாகரோடு சேர்ந்து கொல்ல திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆறு மாதகாலமாகத் திட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனால், மனோகரைக் கொல்ல இருவரும் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதன்படி, கடந்த 24 -ம் தேதி சித்ரா தன் கணவரை க.பரமத்தி சந்தைக்கு அனுப்பி, வீட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகை சாமான்களை வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை சுதாகரிடம் சித்ரா தெரிவித்துள்ளார். 'இதுதான் மனோகரனைக் கொல்ல சரியான தருணம்' என்று நினைத்த சுதாகர், தனது வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு, க.பரமத்தி நோக்கிச் சென்றுள்ளார்.

Vikatan

முடிகனம் கருப்புசாமி காடு அருகே சென்றபோது, எதிரே பைக்கில் மனோகரன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, டிராக்டரின் வேகத்தை அதிகப்படுத்திய சுதாகர், அதேவேகத்தோடு போய் மனோகரனை மோதி தள்ளியிருக்கிறார். அலறியபடி கீழே விழுந்த மனோகரன் மீது, டிராக்டரை ஏற்றிவிட்டு, நிற்காமல் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். படுகாயமடைந்த மனோகரன் உயிருக்குப் போராடினார்.

 சுதாகர்
சுதாகர்
நா.ராஜமுருகன்

கரூர் அரசு மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், 'மனோகரனை டிராக்டர் ஏற்றிக் கொன்றது, சுதாகர்தான்' என்று சொல்ல, அவரைக் கைது செய்த க.பரமத்தி காவல்நிலைய போலீஸார், அவர் மூலமாக மனோகரனைக் கொலை செய்யச் சொன்ன சித்ராவையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சித்ரா, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "என் கணவர் என்னை அன்பாக வைத்திருந்தார். வீட்டில் அருகில் வசித்த கல்லூரி மாணவனான சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தை என் கணவர் கண்டுபிடித்துவிட்டார். இரண்டு பேரையும் கண்டித்தார். தினமும் இதையே சொல்லி, என்னைத் திட்டினார்.

க.பரமத்தி காவல் நிலையம்
க.பரமத்தி காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

இதனால், கோபமான நான், சுதாகர் மூலமாக அவரைக் கொல்ல திட்டம்போட்டேன். இரண்டு பேரும் சேர்ந்து கடந்த ஆறு மாதங்களாகவே பல திட்டங்களைப் போட்டோம். ஆனா, 'ஈஸியா மாட்டிக்குவோம்'னு நெனச்சுதான், டிராக்டரை விட்டு ஏற்றிக்கொன்னுட்டு, விபத்துபோல காட்டி தப்பித்துவிடலாம் என்று நினைச்சோம். ஆனால், சுதாகர் என் கணவரை டிராக்டர் ஏற்றிக்கொள்வதை சிலர் பார்த்துட்டாங்க. அதனால், மாட்டிக்கிட்டோம்" என்று சொல்ல, போலீஸாரே ஒருகணம் ஆடிப்போயிருக்கிறார்கள்.