Published:Updated:

'வாழ்நாள் சிறை; ரூ.1,000 அபராதம்!'- சிறுவனை வதை செய்து கொன்ற இளைஞருக்குத் தண்டனை

பிரதீப் கோர்ட்டில்...
பிரதீப் கோர்ட்டில்...

'பிரதீப், ஏக காலத்தில் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதால், அதிகபட்ச தண்டனையான வாழ்நாள் சிறைத் தண்டனையை பிரதீப் அனுபவிப்பார்' என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஒருவனிடம் ஆசைவார்த்தைக் கூறி, அவனோடு தன்பால் வதை செய்ததோடு, அந்தச் சிறுவனைக் கொலையும் செய்த இளைஞருக்கு, கரூர் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 8-ம் வகுப்பு படித்துவந்த மாணவன், சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது, க.பரமத்தி விசுவநாதபுரி சலவைக்கல் தெருவைச் சேர்ந்த மினி பேருந்து நடத்துனரான பிரதீப் (வயது 21) வெளிநாட்டு சாக்லேட் வாங்கித் தருவதாக அச்சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்.

பிரதீப் கோர்ட்டில்...
பிரதீப் கோர்ட்டில்...

அதை நம்பி அந்தச் சிறுவனும் பிரதீப்புடன் சென்றுள்ளான். பின்னர், அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்ற பிரதீப், வலுக்கட்டாயமாக அந்த சிறுவனை வதை செய்துள்ளார். அதன்பிறகு, 'இந்தச் சம்பசத்தை சிறுவன் வெளியில் சொன்னால் அசிங்கமா போய்விடுமே' என்று பயந்த பிரதீப், துணியால் அச்சிறுவனின் வாய், மூக்கை அழுத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

`போக்ஸோ சட்டத்தில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்!’- கரூர் சிறுமி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி

பள்ளிக்குச் சென்ற சிறுவன் வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், அந்தச் சிறுவனின் பெற்றோர் அல்லாடிப்போனார்கள். அந்த சிறுவனின் நண்பர்கள் வீடுகள், உறவினர் வீடுகள், அக்கம் பக்கம் என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைக்காட்டில் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. இதனால் அலறித்துடித்தனர் அந்தச் சிறுவனின் பெற்றோர். இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தாய், க.பரமத்தி போலீஸில் புகார் அளித்தார். வழக்கைப் பதிவுசெய்த போலீஸார், சிறார்களை வதையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பிரதீப்பைக் கைதுசெய்தனர்.

பிரதீப் கோர்ட்டில்...
பிரதீப் கோர்ட்டில்...

கரூர் மாவட்ட மக்களைப் பதறவைத்த இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, கரூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் க.பரமத்தி போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால், நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரதீப்புக்கு, சிறுவன் வதை குற்றத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையுடன், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் ஒரு மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

'இதனை பிரதீப், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

பிரதீப் கோர்ட்டில்...
பிரதீப் கோர்ட்டில்...

'ஏக காலத்தில் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதால், அதிகபட்ச தண்டனையான வாழ்நாள் சிறையை பிரதீப் அனுபவிப்பார்' என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைத் தொடர்ந்து, கரூர் நீதிமன்றத்திலிருந்து பிரதீப்பை போலீஸார் வேனில் அழைத்துச் சென்று, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை வதைசெய்து கொன்ற மினிபேருந்து நடத்துனருக்கு வாழ்நாள் சிறை மற்றும் ஆயுள் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு