Published:Updated:

நர்ஸிங் மாணவிக்குப் பாலியல் தொல்லை; 40 நாள்களுக்குப் பின் கல்லூரி முதல்வர், விடுதிக் காப்பாளர் கைது

கைது | போலீஸார்

தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், விடுதிக் காப்பாளர் ஆகியோரை 40 நாள்களுக்குப் பிறகு தனிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

நர்ஸிங் மாணவிக்குப் பாலியல் தொல்லை; 40 நாள்களுக்குப் பின் கல்லூரி முதல்வர், விடுதிக் காப்பாளர் கைது

தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி முதல்வர், விடுதிக் காப்பாளர் ஆகியோரை 40 நாள்களுக்குப் பிறகு தனிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கைது | போலீஸார்

கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே கடந்த 20 ஆண்டுகளாக அதிமுக-வைச் சேர்ந்தவரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் என்பவர் தனியார் நர்ஸிங் கல்லூரி நடத்திவருகிறார். இந்த நர்ஸிங் கல்லூரிக்குச் சொந்தமான விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்துவந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, கல்லூரி முதல்வரும், அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமாரும் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

நர்ஸிங் கல்லூரி
நர்ஸிங் கல்லூரி

ஆனால், அந்தச் சிறுமி, அவரின் ஆசைக்கு இணங்க மறுக்கவே, கல்லூரி விடுதியில் பணியில் இருந்துவரும் வதியத்தைச் சேர்ந்த அமுதவல்லி, சமையலராக வேலை பார்த்துவரும் மணப்பாறையைச் சேர்ந்த மகாலட்சுமி இருவரும், அந்தச் சிறுமியிடம், ``செந்தில்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்தால், உனது படிப்புச் சான்றிதழை வழங்க மாட்டோம்” எனவும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் இது குறித்து கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமியின் பெற்றோர் இது குறித்து கரூர் மாவட்ட எஸ்.பி-யிடம் அளித்த புகாரின் பேரில், குளித்தலை மகளிர் போலீஸார் விசாரணை செய்து அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்தனர். ஆனால், இது குறித்து முன்கூட்டியே அறிந்த செந்தில்குமார், அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர். ஆனால், தீவிரமாக அவர்களைத் தேடிவந்த போலீஸார், விடுதி சமையலர் மகாலட்சுமியைக் கடந்த மே 27-ம் தேதி மணப்பாறையில்வைத்து கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் விடுதிக் காப்பாளர் அமுதவள்ளியை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர்.

 போலீஸார்
போலீஸார்

இந்நிலையில், அவர்கள் இருவரும் மேல்மருவத்தூரில் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்தனர். பிறகு, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அவர்களை தனிப்படை போலீஸார் அழைத்து வந்தனர். பின்னர், கரூர் மகிளா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, சிறையில் அடைக்கப்பட்டனர்.