Published:Updated:

`என்னோட பேசாத நீ, உசுரோட இருக்கக் கூடாது' - திருமணம் தாண்டிய உறவு... பெண்ணை வெட்டிக் கொன்ற முதியவர்

ராமசாமி
ராமசாமி

கடந்த ஒரு மாதமாக ராமசாமியிடம் பழனியம்மாள் பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராமசாமி நேற்று அதிகாலை பழனியம்மாளின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றார்.

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் ஒருவர், தன்னோடு பேசுவதை நிறுத்தியதால் கோபமான 70 வயது முதியவர், அரிவாளால் அந்தப் பெண்ணை வெட்டிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம், கரூர் மாவட்ட மக்களை அதிரவைத்திருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட பழனியம்மாள்
கொலைசெய்யப்பட்ட பழனியம்மாள்
கரூர்: போதையில் மனைவியைக் கொன்ற இளைஞர்! - போலீஸுக்கு பயந்து தற்கொலை!

கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள சேவாப்பூரைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரின் மனைவி பழனியம்மாள் (55). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி என்கிற மணிநாயக்கர். 70 வயது முதியவரான மணிநாயக்கருக்கும், பழனியம்மாளுக்கும் இடையில் கடந்த 30 ஆண்டுகளாக திருமணம் தாண்டிய உறவு இருந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவரின் வீடுகளிலும் இந்த விவகாரம் தெரிந்தாலும், இருவரும் திருமணம் தாண்டிய உறவில் தொடர்ந்து இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக ராமசாமியிடம் பழனியம்மாள் பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம்
கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதம்

இதனால், ஆத்திரமடைந்த ராமசாமி நேற்று அதிகாலை பழனியம்மாளின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்று, தூங்கிக்கொண்டிருந்த பழனியம்மாளை வெட்டியதில், பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாலவிடுதி காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து, ராமசாமியைக் கைதுசெய்தனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை முதியவர் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு