Published:Updated:

"வேலை கன்ஃபார்ம்; பணத்தை அனுப்புங்க!"- ரூ.56 லட்சம் மோசடி செய்த குடும்பத்தின் மீது வழக்கு பதிவு!

பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையம்
பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையம்

கரூர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், சுரேஷ் என்பவர் ஏமாந்ததோடு, அவரது சிபாரிசில் அவரின் உறவினர்களுக்கும் வேலை வாங்கித்தருவதாக அலாவுதீன் என்பவர் சொல்லியதை நம்பி, அவரது வங்கிக் கணக்கில் ரூ. 42,00,000 தொகையை வழங்கியிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஆவின் நிறுவனத்தில் வேலை கன்ஃபார்ம். பணத்தை உடனே அனுப்புங்க’’ என்று கூறி, ஐந்து பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த மூன்று பேர் மீது, கரூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் எஸ்.பி அலுவலகம்
கரூர் எஸ்.பி அலுவலகம்
`10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு!' - விவசாயியை ஏமாற்றியவர்களை 7 வருடம்  கழித்து மடக்கிய போலீஸ்

திருச்சியில் ஆவின் பால் உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பதவி மற்றும் அதிக வேலைகள் கிடைக்கும் என தவறான உத்தரவாதத்தை நம்பி, கடந்த 2016-ம் ஆண்டு கரூர் மாவட்டம், குளித்தலை வை.புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 43) ரூ.14 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். அவரின் உறவினர்கள் வேல்முருகன், கோவிந்தராஜ் ஆகியோரின் மூலமாக ஆவின் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, குளித்தலை பெரிய பாலம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்பவரிடம், அலாவுதீன் மனைவி அபிதா பேகம், மகன் ஜாகிர் உசேன் ஆகிய இருவரின் முன்னிலையில், ரூ.14,00,000 பணத்தை சுரேஷ் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு, சுரேஷ் ஏமாந்ததோடு, அவரது சிபாரிசில் அவரின் உறவினர்களான ஜெகதீசன், ரேவதி, அவருடைய நண்பர்கள் ராஜகோபால், பெரியசாமி ஆகிய நான்கு பேருக்கும் வேலை வாங்கித்தருவதாக அலாவுதீன் சொல்லியதை நம்பி, அவரது வங்கிக் கணக்கில் ரூ.42,00,000 வழங்கியுள்ளனர்.

கரூர் எஸ்.பி அலுவலகம்
கரூர் எஸ்.பி அலுவலகம்

மொத்தமாக, ரூ.56 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் அலாவுதீன் கால தாமதப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், திருச்சியிலுள்ள ஆவின் பால் உற்பத்தி லிமிடெட் நிறுவனத்தில் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து பேரும் சென்று விசாரித்தபோது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இந்தாநிலையில், சுரேஷ் நேற்று (ஆகஸ்ட் - 5) கரூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், அலாவுதீன் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய ரசீதுகளை வைத்து புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அலாவுதீன், அவரின் மனைவி அபிதா பேகம், மகன் ஜாகீர் உசேன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக ஐந்து பேரை ஏமாற்றிய சம்பவம், குளித்தலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு