Published:Updated:

கரூர்: தேர்தல் நாளில் செல்போன், டோக்கன்கள் விநியோகம்; அதிமுக-வினரைக் கைது செய்த போலீஸார்!

சோதனை செய்யும் போலீஸார்

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 37 செல்போன்கள் மற்றும் வேட்பாளர் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த டோக்கன்களை தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இன்று காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் 38-வது வார்டு அம்மன்நகர் பகுதியில் அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவர் வீட்டிலிருந்த 26 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அ.தி.மு.க வேட்பாளர் சரவணன் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களும் கைப்பற்றப்பட்டன.

ஈஸ்வரி வீட்டில் சோதனை
ஈஸ்வரி வீட்டில் சோதனை

அதில், விவோ நிறுவனத்தின் வி- 23 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனின் மாடல் எண் அச்சிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், பசுபதிபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் கொடுத்த குற்றத்திற்காக, அ.தி.மு.க பிரமுகர் சங்கர், ராஜு, மாரியாயி மற்றும் சுந்தரி ஆகிய நான்கு நபர்களை, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். தேர்தல் நடக்கும் தினத்தில் வாக்காளர்களுக்கு பரிசுபொருள்கள் கொடுத்து, அ.தி.மு.க-வினர் காவல்துறையிடம் சிக்கியுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism